உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்து தவிர்ப்பு

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுதந்திர தின வாழ்த்து தவிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில், 'வீடு தேடி வரும் உங்களுடன் ஸ்டாலின்' விளம்பரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஆவின் நிறுவனம், நான்காவது ஆண்டாக, சுதந்திர தின வாழ்த்தை அச்சிடாமல் புறக்கணித்துள்ளது. ஆவின் நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பால் பாக்கெட்டுகளில், பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து அச்சிட்டு வந்தது. அதன்பின் ஆயுத பூஜை, விஜயதசமி போன்றவற்றுக்கும் வாழ்த்து அச்சிடப்பட்டது.கடந்த 2021ல், தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின், ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து செய்தி அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இந்த செயல், பா.ஜ., உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் மத்தியில் பேசு பொருளானது. சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது.இவ்வாறு, மக்கள் மத்தியில் பேசுபொருளான பின், கடந்த 2022 முதல், மீண்டும் ஆயுத பூஜை, விஜயதசமி விழாக்களுக்கு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்தி அச்சிடப்பட்டது. அதேபோல், தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பின், கடந்த நான்கு ஆண்டுகளாக, 'சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய பால்வள தினம்' ஆகியவற்றுக்கு வாழ்த்து செய்தி அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், 'வீடு தேடி வரும் உங்களுடன் ஸ்டாலின்' போன்றவற்றின் விளம்பரங்களை, தமிழக அரசு, ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு வருகிறது. ஆனால், சுதந்திர தினத்திற்கு வாழ்த்து செய்தி வெளியிடுவதை ஆவின் நிர்வாகம் தவிர்த்துள்ளது. இதை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

P.Sekaran
ஆக 17, 2025 18:31

ஆவின் பால் பாக்கெட் விலையை ஏற்றி விட்டனர். தேர்தலில் பால் பாக்கெட் இதே விலை நீடிக்கும் என்று சொன்னார்கள். ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் விலையை லிட்டருக்கு ரூ5 ஏற்றிவிட்டன. சுதந்திர தினத்திலிருந்து பச்சை பாக்கெட் ரூ. 22.50 ல் இருந்து ரூ 25


shanmugam p
ஆக 17, 2025 11:37

ஆமாங்க இது ஸ்டாலின் பஸ் என்பதுபோல் இது ஸ்டாலின் நாடு என்று அழைத்தால் போதுமானது. இல்லம் தேடி ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் தியாகிகளின் உள்ளம் தேடி ஸ்டாலின் மக்களுடன் ஸ்டாலின். இனி கருணாநிதி பிறந்த நாள் ஸ்டாலின் பிறந்தநாள் உதயநிதி பிறந்த நாள் என்று கொண்டாடவேண்டும் இனி தமிழ் புத்தாண்டு பொங்கல் தீபாவளி ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை ஆடிப்பெருக்கு தைப்பூசம் குடியரசு தினம் சுதந்திர தினம் பால்வளதினம் போன்ற விழாக்கள் எதற்கு கொண்டாட வேண்டும் ஏன் கைலாசா நாடு இருப்பதுபோல் நீங்கள் கொண்டாட வேண்டும் என்று ஆணை


Ragupathy
ஆக 16, 2025 17:46

திமுக ஆரம்பத்தில் இருந்தே பிரிவினைவாத சக்தி... இப்போது அதிகமாக ஆடுகிறது... நீண்ட நாள் நீடிக்காது...


konanki
ஆக 16, 2025 17:44

ரம்ஜான் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றால் அவர்கள் கோவத்தில் ஓட்டு போட மாட்டார்கள் என்ற பயம். ஆனால் சுதந்திர தின வாழ்த்தை புறக்கணித்தாலும் தீயசகதி கஞ்சா கடத்தும் கும்பல் ஓட்டு போடும் என்ற திட நம்பிக்கை இருப்பதால் இந்த செயல்


surya krishna
ஆக 16, 2025 16:41

கொள்ளைக்காரர்களிடம் எப்படி தேச பக்தி எதிர்பார்க்க முடியும்? தேசத் துரோகிகள்.....


M S RAGHUNATHAN
ஆக 16, 2025 15:45

இன்று கிருஷ்ணாஷ்டமி . ஆவின் பால் கவர்களில் ஒன்றும் இல்லை. ஹிந்துக்கள் விழித்துக் கொண்டால் நல்லது.


அம்பி ஐயர்
ஆக 16, 2025 15:45

சுதந்திரம் கொடுக்காதே.... இங்கிலாந்தில் இருந்து மெட்ராஸ் ராஜ்தானியை மட்டுமாவது ப்ரிட்டிஷார் ஆள வேண்டும்.....ன்னு சொன்னவனுங்க வாரிசுகள் எப்படி சுதந்திர தின விழாவுக்கு வாழ்த்துச் சொல்லுவானுங்க....???? ஒன்றிணைவோம் வா.... ஒரணியில் தமிழ் நாடு.... உங்களுடன் ஸ்டாலின்.... இது போன்ற அதி முக்கிய திட்டங்களுக்கு விளம்பரம் செய்யத் தான் ஆவின்..... இந்து மதப் பண்டிகைகளுக்கோ சுதந்திர தின குடியரசு தினத்திற்கோ வாழ்த்துச் செய்தி ஏன் போட வேண்டும்....??? இது தான் திராவிட மாடல் ஆட்சி....


konanki
ஆக 16, 2025 17:48

பிரிட்டிஷ் அடிவருடிகள்


Vasan
ஆக 16, 2025 15:15

Aavin MD should be sacked immediately.


Rajan A
ஆக 16, 2025 15:05

பிரிண்டர் டாஸ்மாக்கில் மட்டையாகி இருப்பார்.


Nandakumar Naidu.
ஆக 16, 2025 13:35

விடியல் தேச விரோத ஆட்சி மண்ணோடு மண்ணாக அழிந்து போக வேண்டும். அதற்கு மக்கள் தான் திருந்த வேண்டும்.


சமீபத்திய செய்தி