உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இண்டியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை கைவிட வேண்டும்: திருமா

இண்டியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை கைவிட வேண்டும்: திருமா

மதுரை: “இண்டி கூட்டணி தலைவர்கள், 'ஈகோ' பிரச்னைகளை பின்னுக்கு தள்ளி நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:

டில்லியில், பா.ஜ., வெற்றி பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆம் ஆத்மி இயக்கம், இவ்வளவு மோசமான பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில், இண்டி கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. காங்., தன்னை சுய பரிசோதனை செய்வது அவசியம். காங்.,-கும், ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டி கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்.தலைவர்கள், 'ஈகோ' பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நாட்டையும், மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும். லோக்சபா தேர்தல் மட்டுமல்ல; சட்டசபை தேர்தலிலும் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் 100 சதவீதம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ., -- ஆர்.எஸ்.எஸ்., தொண்டராக கவர்னர் ரவி இயங்கிக் கொண்டிருக்கிறார். தி.மு.க., ஆட்சிக்கு நெருக்கடி அளிக்கும் செயல்திட்டத்துடன் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

பதற்றத்துக்கு காரணம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், வெளியூர் ஆட்கள் தான் அங்கு சென்று பிரச்னை ஏற்படுத்துகின்றனர். அங்கேயே காலம் காலமாக இருப்போருக்குள் எவ்வித பிரச்னையும் இல்லை.திருப்பரங்குன்றம் மலை பிரச்னை போலவே, தமிழகம் முழுதும் இருக்கும் அனைத்து பிரச்னைகளையுமே வருவாய்த் துறையினர் பார்க்கின்றனர். எல்லா பிரச்னைகளையும் சட்டம் - ஒழுங்கு அடிப்படையில் மட்டுமே அரசுத் துறை அதிகாரிகள் அணுகுகின்றனர். அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு, 'சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடும்; அதனால் நாங்கள் தடை உத்தரவு போடுகிறோம்' என, மாவட்ட நிர்வாகம் எடுத்த முடிவுதான், தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைக்குக் காரணம். -திருமாவளவன், தலைவர், வி.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Raj S
பிப் 10, 2025 22:06

ஜிஎஸ்டி அப்டீன்னா என்னனே தெரியாம ஒளறின ஒரு அரசியல் வியாதி... பல்லக்கு தூக்க சில ஜாதி வெறிபுடிச்சவங்க... நீயெல்லாம் இருக்கற இடம் தெரியாம என்னிக்கி மறையறியோ அன்னிக்கி தான் தமிழகத்துக்கு விடிவு காலம்...


Yaro Oruvan
பிப் 10, 2025 12:17

டெல்லில பாஜக ஜெயிச்சதுனால நம்மூர்ல பல பேருக்கு நிக்காம போவுதாம்.. மெடிக்கல் ஷாப்புல வழக்கமா தேர்தலுக்கு அப்புறம் ஜெலுசில்தான் காலி ஆகும் .. இந்த வாட்டி பேதி மாத்தறை கெடைக்கமாட்டேங்கிதாம் .. ஆனா பாவம் இந்தி கூட்டணி என்னதான் செய்யும்


Yaro Oruvan
பிப் 10, 2025 12:11

குருமா அது இண்டி கூட்டணி இந்தியா என்பது நாடு.. நாடு முக்கியம்னா அந்த இண்டி கூட்டணில இருப்பீவலா ?


Natarajan Ramanathan
பிப் 10, 2025 09:25

கேவலம்.... உனக்கே ஈகோ இருக்கிறதே


பேசும் தமிழன்
பிப் 09, 2025 11:36

பிஜெபி வெற்றி பெற்றதால்.. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அண்ணன் திருமா....


Seekayyes
பிப் 09, 2025 10:45

பிரதர் நீங்க யார சொல்றீங்க? யாரும் சட்டை செய்யற மாதிரி தெரியலையே.


பேசும் தமிழன்
பிப் 09, 2025 10:36

ஏன்.... நீ தான் இல்லாத இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கி நடத்தலாம் அல்லவா.. நீ தான் தைரியமான ஆள் ஆயிற்றே... எங்கே சொல்லு பார்ப்போம்.. உனக்கு பிளாஸ்டிக் சேர் கூட கொடுக்க மாட்டார்கள்.... தரையில் உட்கார சொல்லி விட போகிறார்கள் !!!


சிவா. தொதநாடு.
பிப் 09, 2025 09:10

அவர்களெல்லாம் உங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது தெரியுமா


கோமாளி
பிப் 09, 2025 09:08

கூட்டணி இல்லாத ஒற்றை அரசாங்கம், மத்தியில் நிலையான எதிர்கட்சி இல்லை, அதிகார குவிப்பு அபத்து என்பதனை திருமாவளவன் உணரந்தது போல இந்தியாவில் எந்த ஒரு கட்சித்தலைவரும் உணர்ந்தது இல்லை. ஆனால் தவறான நோக்கத்துடன் திருமாவை கூட்டணி சேர்த்துக்கொண்டிருக்கும் கட்சிகளால் திருமா அரசியல் அநாதை ஆக்கப்படுவார். ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது.


T.sthivinayagam
பிப் 09, 2025 09:00

இந்தியா கூட்டனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா தலைமை ஏற்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்


Yaro Oruvan
பிப் 10, 2025 12:13

அண்டார்டிக்காவுல இருக்குற மக்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை