உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னை:சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னை திரும்பியது.சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை, 8:00 மணிக்கு, இண்டிகோ விமானம் மதுரைக்கு புறப்பட்டது. இதில், 75 பயணியர் இருந்தனர். சென்னை வான்வெளியில் பறந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தந்தார். அவர்கள் விமானத்தை தரையிறக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி விமானம் காலை, 9:00 மணிக்கு, அவசரமாக தரையிறங்கியது. விமானத்திலிருந்த பயணியர் பத்திரமாக இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை