தனி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்படணும்
உள்ளாட்சி அமைப்புகளில், அடிப்படை பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, புதிய மனைப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவது, கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது என, அனைத்திலும் பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தலையிடுகின்றனர். அவர்களை கேட்காமல் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என, அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போடுகின்றனர். இது தெடார்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் விளைவாக, தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம், சாலைப் பணிகள் போன்றவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. முதல்வர் உடனே தலையிட்டு, பதவிக் காலம் முடிந்த பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளில் தலையிடுவதை தடுத்து நிறுத்தி, தனி அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.--- பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்.