உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவால்களை உடைத்து புதிய சாதனைகள் படைக்க தூண்டுதல்: அஜித் நெகிழ்ச்சி

சவால்களை உடைத்து புதிய சாதனைகள் படைக்க தூண்டுதல்: அஜித் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''உங்கள் அன்பும் ஆதரவும், என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது,'' என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:அன்பான அனைவருக்கும் வணக்கம்! துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன்.அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்!நன்றி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Saai Sundharamurthy AVK
ஜன 14, 2025 14:17

அஜித்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


Karthik
ஜன 14, 2025 14:13

உங்களின் விடாமுயற்சி வீண் போகாது. உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள் Mr AK


Shekar
ஜன 14, 2025 13:54

அஜித் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்க முடியுமா?


r ravichandran
ஜன 14, 2025 12:09

எல்லாம் வல்ல இறைவன், இவர் இனி சங்கி என்று அழைக்கப்படுவார்.


prem Anand
ஜன 14, 2025 12:25

unna ...nu ellarolaum azhaikapaduvai


kazhikulam M. Natarajan
ஜன 14, 2025 14:58

சரி 200 ருபாய் அடிமை


Saravanan Ganapathy
ஜன 14, 2025 15:53

உன்ன மாதிரி திருட்டு திராவிட தலைவனையே மேடையில் வைத்து கேள்வி கேட்டவன்டா என் தல நீயெல்லாம் ஒரு ஆளா போயி 200 மேல கூவாத


Gururaj Kamaraj
ஜன 14, 2025 12:08

ALL THE BEST MR.AK


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை