உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக.,24, 25ல் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: நிகழ்ச்சி முழு விபரம் வெளியானது

ஆக.,24, 25ல் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: நிகழ்ச்சி முழு விபரம் வெளியானது

சென்னை: ஆக.,24, 25ம் தேதிகளில் பழநியில் நடைபெற உள்ள 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.முருகப் பெருமானின் பெருமையை, உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் இந்த ஆண்டு 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை' இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. அதன்படி வரும் ஆக., 24, 25ல் பழநியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மாநாட்டில் உலகளாவிய சமய சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பல்வேறு அரங்குகள் அமைகின்றன. குறிப்பாக, விழாவில் கலைநிகழ்ச்சி அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ் பேசும் கண்காட்சி, மக்கள் அனைவரும் வழிபடும் வகையில் வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

துவக்க விழா

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, சச்சிதானந்தம், எம்.பி., சச்சிதானந்தம், எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் துவக்க விழா நடைபெறுகிறது.

நல்ஆசியுரை வழங்கும் ஆதீனங்கள்

அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனம்குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திருவண்ணாமலை ஆதீனம்சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனம்சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள் குருமகா சந்நிதானம், செங்கோல் ஆதீனம்குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம்சிவ சண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாசாரியா சுவாமிகள்திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம்சீர்வளர்சீர் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தருமபுரம் ஆதீனம்சீர்வளர்சீர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மதுரை ஆதீனம்சிவஞான பாலய சுவாமிகள் மயிலம் பொம்மபுர ஆதீனம்காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் குருமகா சந்நிதானம், திருப்பனந்தாள் காசிமடம்மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சூரியனார்கோயில் ஆதீனம்சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் வேளாக்குறிச்சி ஆதீனம்

நிறைவு விழா

மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகம் அறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் நீதிபதி பி.வேல்முருகன் விருதுகளை வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராமகிருஷ்ணன்
ஆக 16, 2024 05:17

எனக்கென்னமோ முத்தமிழ் வித்தவர் மாநாடு ஆகிவிடுமா என்று பலத்த சந்தேகங்கள் வருது.


இராம தாசன்
ஆக 16, 2024 02:02

துர்கா அம்மையார் / சபரீசன் மற்றும் அவர் மனைவி - சிறப்பு விருந்தினர்கலா? அவர்கள் ஆசி இல்லாமல் விழா எடுக்க முடியாதே


kulandai kannan
ஆக 15, 2024 22:42

பழனி முருகன் தரிசனம் உண்டா நிகழ்ச்சி நிரலில்?


ஆரூர் ரங்
ஆக 15, 2024 22:05

வர மறுக்கும் ஆதீனங்களை வழிக்குக் கொண்டு வர சாம தான பேத முறைகள் அவ‌ர்களு‌க்கு நன்கு தெரியும்.


karutthu
ஆக 15, 2024 21:15

ஏன் காஞ்சி காமகோடி மடம் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்ர்ய சுவாமிகளை ஏன் நேரடியாக அழைக்கவில்லை


sridhar
ஆக 15, 2024 21:10

ஹிந்து அறநிலைய துறை பணத்தை கொள்ளை அடிக்க நாத்திகர்கள் நடத்தும் மாநாடு , பொய் கணக்கு எழுதப்படும் , முருகன் தமிழ்நாட்டு கடவுள் என்று சொல்லுவது ஒரு அவமானம் . இறைவன் omnipresent என்ற நம்பிக்கைக்கு விரோதம்.


rama adhavan
ஆக 15, 2024 20:40

இது தேவை அற்றது. பிற்காலத்தில் விளம்பரதிற்கு மற்றும் உதவலாம். ஆமாம், முதலில் ஹோம குண்டம் வளர்த்து மந்திரங்கள் சொல்வார்களா? காவடி, வேல், சேவல் கொடி ஊர்வலம் உண்டா? ஹிந்துக்கள் கருத்துக்களை கேட்டார்களா?முதலில் முதல்வர் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லட்டும்.


Mr Krish Tamilnadu
ஆக 15, 2024 19:53

தமிழ் கடவுள் முருக பெருமானை நாம கொண்டா டாம யார் கொண்டாட முடியும். அழகு தமிழின் உருவம் அவர். தமிழ் கடவுளை பெருமை படுத்தினால், தமிழை பெருமை படுத்தியது போல். அவரின் சிலையை தமிழக சட்டசபை வளாகத்திலேயே அமைக்க வேண்டும் என்பது என் ஆவா.


SUBBU,MADURAI
ஆக 15, 2024 18:53

இந்துக்களின் ஓட்டு கிடைக்க வேண்டுமென்றால் பழனி முருகனுக்கு காவடி கூட எடுக்க கூட தயங்க மாட்டார்கள் என்று திமுகவினர் பற்றி துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் சொன்னது இப்போது நிரூபணம் ஆகி கொண்டு இருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது சோ ஒரு தீர்க்கதரிசி என்பது உண்மை.


palanisamy
ஆக 15, 2024 18:37

யாரு கனவுல முருகபெருமான் மாநாடு நடத்த சொன்னாரு.... அதுவும் கட்டாய நன்கொடை வசூல் செய்து நடத்த வேண்டிய அவசியம் என்ன?பழனி சுற்று புற வசதிகள் கொஞ்சம் கூட முறையாக இல்லை.... இதுல மாநாடு ரொம்ப முக்கியம் அதுவும் நாத்திகன் கட்சி நடத்தும் மாநாடு..... மா....நாடகம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை