உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் பயன்பாடு

கிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் பயன்பாடு

கோவை: 'இன்டர்நெட் அண்டு மொபைல் அசோசியேஷன் ஆப் இண்டியா' தரவுகளின்படி, தமிழகத்தின் ஸ்டார்ட்அப் தொழிற்சூழல் குறித்த, அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, ஊரகப்பகுதிகளில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, அதிகமாக உள்ளது. கடந்த 2024 தரவுகளின் படி, இந்தியாவில் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 100 கோடிக்கும் அதிகம். 2030ல் இது, 50 சதவீதம் அதிகரித்து, 150 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 88 கோடி; இது, 2030ல் 120 கோடியாக அதாவது, 35 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் தற்போது 39.7 கோடி பேரும், ஊரகங்களில் 48 கோடி பேரும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இது வரும் 2030ல், முறையே 54 கோடியாகவும், 70 கோடியாகவும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையைப் பயன்படுத்துபவர்களில், ஆண்களின் எண்ணிக்கை 47 கோடியாகவும், பெண்களின் எண்ணிக்கை 41 கோடி ஸ்மார்ட்போன்களின் பயன்பாடே, இணைய சேவை மக்களிடையே இந்த அளவுக்கு ஊடுருவ காரணம் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மணிமுருகன்
அக் 22, 2025 23:34

நகர்புறங்களில் வேலை பளுவினால் குறைந்திருக்கலாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தரமில்லை செய்திகள் தவறான அணுகுமுறை என்பதால் மக்கள் பெரும்பாலும் நகைச்சுவை படம் நாடகத் தொகுப்பு என்று பார்க்கிறார்கள் இளைஞரிடையே வேண்டதகாத செயலிகள் பயன்பாடு உள்ளது


RAMAKRISHNAN NATESAN
அக் 22, 2025 13:46

எப்படி பயன்படுத்தறாங்க என்பதே கேள்வி.. நம்ம பிரதமர் இந்திய மக்கள் தொகையில் இளைய தலைமுறையினரே அதிகம்ன்னு பெருமைப்பட்டுக்கிட்டு இருக்காரு....


kanagasundaram
அக் 22, 2025 07:13

கிராமப்புறங்களில் வசதி உள்ளவர்கள் மட்டுமே இன்டர்நெட்டை ஏர்டெல் ஜியோ பயன்படுத்துகின்றனர்.பிஎஸ்என்எல் ஐ பயன்படுத்த முடியவில்லை.வாய்ஸ் கால் கூட சரியில்லை.பிஎஸ்என்எல் 4ஜி வந்தும் பயன் இல்லை.


பிரேம்ஜி
அக் 22, 2025 07:07

கள்ளக் காதல் கொலைகள் கூடும்!


Kasimani Baskaran
அக் 22, 2025 03:47

அதாவது 140 கோடி மக்கள் தொகையில் 40 கோடிப்பேரிடம் மட்டும் செல் போன்கள் இல்லை... நூறு கோடி செல் போன் தயாரித்து சீனா பெருந்தொகையை சம்பாதித்து விட்டது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை