உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளிடம் போதையில் ரகளை; ஆயுதப்படை போலீஸ்காரர் சிறைபிடிப்பு

விவசாயிகளிடம் போதையில் ரகளை; ஆயுதப்படை போலீஸ்காரர் சிறைபிடிப்பு

தஞ்சாவூர் : டில்லியில் பல்வேறு கோரிக்கைகளுடன் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகம் முழுதும் நேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் நடந்தது.அதன்படி நேற்று, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் ரயில் மறியலில் விவசாயிகள் ஈடுபட முயன்றனர்.அவர்களை, பாபநாசம் தபால் நிலையம் அருகில் போலீசார் தடுத்து கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, விவசாயிகளுக்கு தண்ணீர் கூட வழங்காததால் ஆத்திரமடைந்தவர்கள் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் வழங்கிய உணவை சிலர் சாப்பிடாமல், வெளியில் உள்ள கடைகளில் வாங்கி சாப்பிட்டனர்.அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த மணி என்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அவர், மது போதையில் இருப்பதை அறிந்த விவசாயிகள், மணியை மொபைல் போனில் வீடியோ எடுத்தனர்.மேலும், அவரை மண்டபத்தில் உள்ள அறையில் தரையில் படுக்க வைத்து, அந்த அறையை பூட்டினர். இதையறிந்த சக போலீஸ்காரர்கள் அவரை காப்பாற்றும் விதமாக, வீடியோ எடுத்த விவசாயிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து விவசாயிகள் கோஷமிட்டனர். மணியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது:விவசாயிகளிடம் போலீசார் இருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் தப்பித்து விட்டார். இது குறித்து, எஸ்.பி., உரிய விசாரணை நடத்த வேண்டும். தஞ்சாவூரில் திட்டமிட்டு விவசாயிகளுக்கு எதிராக போலீசார் செயல்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ