மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு
4 minutes ago
டெட் முதல் தாள் தேர்வு: 14,958 பேர் ஆப்சென்ட்
5 minutes ago
சிறு வணிக கடன் அதிகம் வழங்க உத்தரவு
6 minutes ago
சென்னை: மத்திய கல்வித்துறையானது, 'ஸ்வயம்' திட்டத்தின் கீழ், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை, 'ஆன்லைன்' வழியே இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், 'ஸ்வயம்' திட்டத்தின் கீழ், இன்ஜினியரிங் மாணவ, மாணவியருக்கு, இலவச, 'ஆன்லைன்' சான்றிதழ் படிப்புகள் துவங்க உள்ளன. தரவு கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, மென்பொருள், தரவு அடிப்படை மேலாண்மை உட்பட ஒன்பது வகையான, குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த படிப்புகளை, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், ஆன்லைன் வழியே கற்பிக்க உள்ளனர். இதில், ஒரு சில படிப்புகள், தமிழ் மொழியிலும் கற்பிக்கப்பட உள்ளன. விருப்பமுள்ள மாணவ - மாணவியர், https://swayam.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
4 minutes ago
5 minutes ago
6 minutes ago