உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பினாமி பெயரில் பி.எப்.ஐ., அறக்கட்டளை வெளிநாட்டு வசூல் குறித்து விசாரணை

பினாமி பெயரில் பி.எப்.ஐ., அறக்கட்டளை வெளிநாட்டு வசூல் குறித்து விசாரணை

சென்னை: பினாமிகள் பெயரில், பி.எப்.ஐ., எனும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' நிர்வாகிகள் அறக்கட்டளைகள் துவங்கி, வெளிநாடுகளில் இருந்து நிதி வசூலித்தது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள், ரகசிய செயற்பாட்டாளர்கள், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி திரட்டி உள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=waa2fyfq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சதி திட்டம் தீட்டவும், பயங்கரவாத செயலுக்கும் நிதி திரட்டியது தெரியவந்தது. பி.எப்.ஐ.,யின் அரசியல் அமைப்பு தான், எஸ்.டி.பி.ஐ., என்பதும், இந்த இரண்டு அமைப்புகளுக்கும் நடந்த பண பரிமாற்றம் குறித்த ரகசிய டைரியையும், பறிமுதல் செய்துள்ளோம். எஸ்.டி.பி.ஐ., அமைப்புக்கு வேட்பாளர் தேர்வு, பொது நிகழ்ச்சிகளை நடத்துதல், உறுப்பினர் சேர்க்கைக்கு, பி.எப்.ஐ., தான் பணம் கொடுத்து உள்ளது. இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து, சமூக சேவைக்கு என, பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், பி.எப்.ஐ., சொத்துக்கள் பெரும்பாலும் அறக்கட்டளை பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர், சிமி என்ற ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில், உடற்பயிற்சி கூடங்கள் என்ற பெயரில் ஆயுத பயிற்சியும், தாக்குதல் நடத்துவற்கான பயிற்சிகளும் அளித்துள்ளனர். இவர்கள், கேரள மாநிலத்தில் நடத்தி வந்த எட்டு அறக்கட்டளைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன; 129 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. தொடர் விசாரணையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள், தமிழகத்திலும் பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகள் துவங்கி, பயங்கரவாத செயலுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே கைதான பி.எப்.ஐ., நிர்வாகிகள், 28 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன. இலவச கல்வி, மருத்துவ வசதிகள் செய்து தருவதுபோல முகாம்கள் நடத்தி, அதை ஆவணப்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி, பணம் பெற்றுஉள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kalyanaraman
நவ 11, 2025 08:20

முஸ்லிம்களிடம் வியாபாரம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பணம் நிறைய இருப்பதால்தான் இந்த ஆட்டம்.


Kalyanaraman
நவ 11, 2025 08:17

நம் கூடவே இருந்து குழி பறிக்கும் அமைப்பு/ நபர்கள்/ அரசியல்வாதிகளை ஈடியைப் போல் ஒரு தனி அமைப்பை உருவாக்கி முளையிலேயே நசுக்க வேண்டும். 13 வழக்குகளில் பெயிலில் இருக்கும் "ராஹல் கானை" முதலில் உள்ளே பிடித்து போடுங்கள்.


GMM
நவ 11, 2025 07:56

அறக்கட்டளை வெளிநாட்டு நிதி மத்திய நிதித்துறையின் ஒரு பிரிவு மூலம் பராமரிப்பு கண்காணிக்க வேண்டும். 1 சதவீதம் வரி விதிக்க வேண்டும். எதற்கும் வரி விலக்கு கூடாது. மத மாற்றம் சட்டம் மூலம் தடுக்க வேண்டும். நிதியுதவி தானே குறையும். பெற்ற நிதியின் செலவு விவரம் பெற்று, மற்ற நிதி விடுவிக்க வேண்டும். உள்நாட்டில் ஆபத்தான சில அறக்கட்டளை அமைப்புகள் உள்ளன.


naranam
நவ 11, 2025 07:26

தடை செய்தல் மட்டும் போதாது.. சுத்தமாக இவனுங்களை ஒழித்துக் கட்டவேண்டும். நம்நாட்டில் வாழும் தீவிரவாதக் குடிமகன்களையும் உடனடியாகக் தீர்த்துக்கட்ட வேண்டும்.


Krishna
நவ 11, 2025 07:20

Ban/Cancel All Conversions Out of Native Hinduism wef 15Aug1947. Arrest-Defame-Punish All Anti Nation Anti Native People Conspirators


தமிழ் மைந்தன்
நவ 11, 2025 06:56

உன்னைபோல தற்குறிகள் இந்த நாட்டில் உள்ளவரை ஊழல் திமுக காங்கிரஸ் போன்றவை வளரும்


Oviya vijay
நவ 11, 2025 06:39

என்கவுன்ட்டர் ஒன்றே வழி...


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 11, 2025 06:08

பெரும்பான்மை ஹிந்து வாக்குகளைக் கவர மூர்க்க இயக்கங்களை ஒரேயடியாகத் தடையும் செய்ய மாட்டோம் ..... மூர்க்க ஆபத்தை பெரும்பான்மையினர் தொடர்ந்து உணர்ந்தால்தான் எங்களுக்கு வாக்குகள் குவியும் ..... இப்படிக்கு ஒன்றிய பாஜக ....


சமீபத்திய செய்தி