உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் பயிலும் கவர்னர் தமிழுக்கு எதிரியா: அர்ஜுன் சம்பத் கேள்வி

தமிழ் பயிலும் கவர்னர் தமிழுக்கு எதிரியா: அர்ஜுன் சம்பத் கேள்வி

மீஞ்சூர் : ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி: தமிழகத்தில் திராவிட மாடல் எனக் கூறிக் கொண்டு தேசியத்தை எதிர்த்து வருகின்றனர்; பிரிவினையையும் தூண்டுகின்றனர். மத்திய அரசை விமர்சனம் செய்யலாம். ஆனால், தேசிய கீதத்திற்கு எப்போதும் மரியாதை அளிக்க வேண்டும். தமிழ் ஆசிரியரை வைத்து, கவர்னர் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறார். அதை வைத்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி வருகிறார். ஆனால், அவர் தமிழுக்கு எதிரிபோல சித்தரிக்க முயல்கின்றனர். ஆந்திரா, கர்நாடகாவில் திராவிடத்தை ஏற்பதில்லை. இங்கு தான் சினிமாக்காரர்களை வைத்து திராவிடத்துக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலேயே கோவில்கள் அதிகமாக இருப்பது தமிழகத்தில்தான். 40,000க்கும் மேற்பட்ட கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது.இதனாலேயே ஹிந்து கோவில்களில் அரசியல் தலையீடுகள் அதிகம் உள்ளன. அதே நேரம் சர்ச்சுகளிலும், மசூதிகளிலும் அப்படிப்பட்ட நிலை இல்லை. அதனால், கோவில்கள் அனைத்தையும் ஹிந்து அறநிலையத் துறை விடுவிக்க வேண்டும். நிர்வாகத்தை, ஹிந்து ஆன்மிகவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிர்வாகத்தை கவனிக்க, தனி அதிகார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை