உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவின் நல்லாட்சியா? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவின் நல்லாட்சியா? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

சென்னை: விவசாயிகளின் நலனை கைகழுவி விட்டு, விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போல் இருப்பதாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையினால் சேதமாகியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. 2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50% குறைத்து விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு. அத்தோடு நில்லாது, பயிர்களைத் தற்காலிக கொள்முதல் நிலையங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி மழையில் நனையவிட்டு வீணாக்கி உழவர்களின் உழைப்பை அவமதித்துள்ளது. இப்படி தொடர்ந்து உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போலும். 'நானும் டெல்டாக்காரன் தான்' என்று இனியொரு முறை பெருமிதம் கொள்ளும் முன், டெல்டா விவசாயிகளின் துயரங்களை ஒருமுறையாவது கண்டுகொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. SRINIVASAN
ஆக 04, 2025 17:08

உங்களுக்கு என்ன அருகதை இருக்கு பேச.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 04, 2025 14:08

நயினார் நாகேந்திரன்சார் ...இவர்கள் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிரார்களோ அப்போதெல்லாம் மறக்காமல் விவசாயிகளின் வயிற்றில் ஏறி மிதிப்பார்கள் ... 1974 இல் காவிரிநதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காத துரோகம் , பூச்சிமருந்தை ஹெலிகாப்டரில் தெளிப்பதால் ஊழல் , கூட்டுறவு கடனை காட்டாத விவசாயிகள்மீது ஜப்தி நடவடிகை என்ற பெயரில் ஆடுமாடுகள் , பாத்திரங்கள் , பட்டு புடவைகள் போன்றவற்றை எடுத்து சென்றார்கள் ..மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் , விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு அனைத்தையும் செய்வார்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை