உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை

விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாமக்கல்: ''எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,'' என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாமக்கல்லில்அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள கிட்னி திருட்டு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் இரண்டு விஷயங்களை கூறினார்கள். எனக்கு தெரியும், சீருடையில் இருக்கும் அரசு அதிகாரிகள் பத்திரிகையில் பேசக் கூடாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a5y2aw1p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்றைக்கு நிலைமை அதனை எல்லாம் தாண்டி சென்றது. அதனால் தான் நான் உங்களிடம் பேசுகிறேன் என கூறினார். என் வீட்டில் இருந்து அலுவலகம் வரை நடந்து செல்லும் போது எந்த பத்திரிகையையும் நான் கூப்பிடவில்லை. இன்றைக்கு நான் பத்திரிகையை அழைத்து பேட்டி அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். இந்த அளவுக்கு அதிகாரிகள் அவரை துன்புறுத்தி இருக்கிறார்கள். எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நீதி பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.நிருபர்: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சர்ச்சையும் ஒன்றும் இல்லை. கருத்துக்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். எல்லோருடைய கருத்துக்களும் பொதுவெளியில் இருக்கிறது. இதில் சர்ச்சைக்கு எல்லாம் ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே புள்ளியில் அமைந்து இருக்கிறோம். தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்று ஒற்றைப்புள்ளியில் இணைந்து இருக்கிறோம். அது எப்படி இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பும், பிறகு எப்படி இருக்க வேண்டும் என்று சம்பந்தபட்ட தலைவர்கள் பேசுவார்கள். எந்த குழப்பமும் இல்லை. எங்களை பொறுத்தவரை தி.மு.க., அகற்றப்பட வேண்டும் என்ற விஷயத்தில் ஒன்றாக இருக்கிறோம்'' என அண்ணாமலை பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ethiraj
ஜூலை 20, 2025 11:56

DMK to be wiped out of TN is the agenda of all voters and all other political parties parties.


allan asir
ஜூலை 20, 2025 08:53

அத உங்க ஓனர பேச சொல்லு


maruthu pandi
ஜூலை 19, 2025 18:47

சார் நீங்கள் தலைவர் நாற்காலி யில் மீண்டும் அமருங்கள்.. இந்த திருட்டு திராவிடத்தை கேள்வி கேட்டு முடக்க வேறு யாரும் இங்கு இல்லை... கடவுளே காப்பாற்று


JOTHI DOSS S
ஜூலை 23, 2025 14:03

வெரி நைஸ்


R.P.Anand
ஜூலை 19, 2025 16:25

தலைவா தொடர்ந்து உங்கள் குரல் ஒலிக்க வேண்டும். அப்போ தான் திமிர் பிடித்த திராவிடம் ஒழியும்.


J.Isaac
ஜூலை 19, 2025 16:22

பின்னணியில் இவரது தூண்டுதலாக இருக்குமோ?


R.P.Anand
ஜூலை 19, 2025 16:21

சூப்பர் சார். ஞாயத்திர்க்காக போராடும் ஒருவருக்கு உங்கள் குரல் சப்போர்ட்டாக இருக்கும். உங்களை விட்டால் ஒருத்தநும் இல்லை. நன்றி சார்


தஞ்சை மன்னர்
ஜூலை 19, 2025 14:21

முதலில் அதை சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு , சட்டசபை எதிர்கட்சி தலைவரா , இல்லை கட்சி தலைவரா இல்லை அதில் என்ன நடந்து இருக்கு என்று அரசின் நிர்வாக ரகசியம் எப்படி தெரியுது அதற்க்கே உங்களுக்கு தண்டனை உண்டு ஒரு டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்கின்றனர் என்றால் சட்டப்படி அட்டர்னி ஜெனரல் கலந்து ஆலோசிக்காமல் செய்ய இது பி சே பி அரசாங்கம் இல்லை நீதிமன்றத்தால் குட்டு வாங்க கருப்பு சிவப்பு கலந்த ஆட்சி இது நீர் மூடி கிட்டு இரு


Sudhakar
ஜூலை 19, 2025 15:05

சாதாரண மக்கள் கூட கேள்வி கேட்கலாம் அவர் முன்னாள் பிஜேபி மாநில தலைவர். உன்னை போல் கொத்தடிமை இல்ல வேடிக்கை பார்க்க .


ديفيد رافائيل
ஜூலை 19, 2025 15:22

ஆளும் மத்திய அரசின் மாநில முன்னால் தலைவர்


vivek
ஜூலை 19, 2025 17:54

வந்மாங்காய் மன்னர்


G Mahalingam
ஜூலை 19, 2025 18:54

ஜனநாயக ஆட்சியில் முதல்வர் வேலை காரன் பிரதமர் பெரிய வேலைக்காரன். தவறை சுட்டி காட்ட யாருக்கும் பயப்பட வேண்டாம்.


Paramasivam
ஜூலை 20, 2025 08:55

ஆம் இந்த ஆட்சி கொள்ளையும்கருப்பு கொலையும்சிவப்பும் கலந்த ஆட்சிதான். அதனால் நான் நேர்மைக்கு இடமில்லை.


sundarsvpr
ஜூலை 19, 2025 13:55

நிர்வாக நலனை கருத்தில்கொண்டு புலன் விசாரணை எதிர்பார்த்து அரசு ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டால் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். குற்றம் செய்யவில்லை என்று உறுதியானால் இந்த பணி நீக்கம் motivattaai இருக்கலாம். இதனை கண்டுபிடிக்க ஒரு நேர்மையையான விசாரணை இருக்கவேண்டும். அப்போதுதான் mottivetive என்பதற்கு அர்த்தம் உண்டு. அரை சம்பளம் படி பெற்றவர் முழுசம்பளம் பெறுவார். இந்த இழப்பு தொகைக்கு வட்டி வழங்கவேண்டும். இதனை அரசு write of செய்யவேண்டும் அல்லது தவறான நடவடிக்கை எடுத்தவர் இடமிருந்து பிடித்தம் செய்யவேண்டும்.


பிரேம்ஜி
ஜூலை 19, 2025 13:28

நீங்கள் யார் ஏற்றுக் கொள்ள? வெட்டிப் பேச்சு!


Manaimaran
ஜூலை 19, 2025 13:24

அடிக்கடி நிறம் மாறும் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை