உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமரின் திட்டத்திற்கு கருணாநிதி பெயரா?

பிரதமரின் திட்டத்திற்கு கருணாநிதி பெயரா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' என்ற வீடு கட்டும் திட்டத்துக்கு, 'கருணாநிதி கனவு இல்லம் திட்டம்' என்று எப்படி பெயர் வைக்கலாம்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் முருகன், அண்ணாமலையை வரவேற்றார். விமான நிலையத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர், நடிகை த்ரிஷா குறித்து கருத்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. போலீசார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மொத்தம் நான்கு கோடி பேர் வீடு கட்டியுள்ளனர். அதற்கு தமிழகத்தில், 'கருணாநிதி கனவு இல்லம் திட்டம்' என்று பெயர் வைப்பது தவறு. வெற்று அறிவிப்புதமிழக பட்ஜெட்டில், ஒவ்வொரு முறையும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது; தற்போதைய பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளனர். ஆனால், அப்படி எந்த பூங்காவும் கட்டப்படவில்லை. அது, கோவை மக்களை தொடர்ந்து ஏமாற்றும் வெற்று அறிவிப்பு.கோவை நகருக்குள் வரும் ஆறு ரயில்களை, போத்தனுார் வழியாக திருப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கோவையின் வளர்ச்சிக்காகவும், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனை விரிவுபடுத்துவதற்காகவும், கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், 'வந்தே பாரத்' மற்றும் 'உதய் எக்ஸ்பிரஸ்' ரயில்கள் எளிதாக வந்து செல்வதற்காகவே, இந்த மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது.எந்த ரயிலையும் நிறுத்தவோ, மாற்றிவிடும் திட்டமோ இல்லை. கோவையின் வளர்ச்சி போத்தனுாருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Sudhakar
பிப் 23, 2024 19:10

பெரும்பாலான மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். அப்போ தமிழ்நாட்டின் மூன்று லட்சம் கோடி நிதி எங்கே போகிறது


M Ramachandran
பிப் 23, 2024 18:49

பெயரிலேயே திருட்டு என்ற அடையய் மொழி உள்ள கழகங்கள் அவை ஸ்டிக்கர் ஒட்டி குடும்பத்திற்கு அரசு கஜானா பணத்தைய திருப்புவதில் தான் கவனம் யேழை எழிய மக்களுக்கு நல தித்திட்டங்கள் என்று சும்மா கைக்கூலி ஊடகங்கள் மூலம் விளம்பரம் நிஜமகா ஸிரோ. இந்த கழகங்களின் தோலை அண்ணாமலை உரித்து காட்டுவதால் மக்களுக்கு புரியா ஆரம்பித்து விட்டது . இன்னி டப்பா டான்சு ஆடி விடும் .மக்கள் நல திட்டங்கள் நிறைய்ய வேர்ற அக்கறைஇல்லை.


K.Ramakrishnan
பிப் 23, 2024 18:46

இது முழுக்க முழுக்க தமிழக அரசு நிதி...


Barakat Ali
பிப் 24, 2024 09:51

ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் ஒரு தனிநபரின் பெயரை எப்படி திட்டத்துக்கு வைக்கலாம் ????


K.Ramakrishnan
பிப் 23, 2024 18:44

நல்லா விளக்கம் சொல்றப்பா...


Anbuselvan
பிப் 23, 2024 18:42

அடுத்தவர் உழைப்பில் குளிர் காய்வது போல் ஆகி விட்டதே


Nachiar
பிப் 23, 2024 18:22

பொறுப்பு உள்ள மாற்று அரசு வந்தவுடன் பெயர் மாற்றம் அரசு நிலத்தில் சிலைகளை அகற்ற பட்ஜெட்டில் ஒரு தொகையை ஒதுக்க வேண்டும்.


Godyes
பிப் 23, 2024 15:51

யாராவது திராவிடன பாத்தா உன் சொந்த ஊரு எதுடான்னு கேளுங்க.


ஆரூர் ரங்
பிப் 23, 2024 15:15

வீட்டுக் கழிப்பறைகள் திட்டத்தில் மாநில அரசு பங்களிப்பும் உண்டு. ????அதற்கும் வேறு பெயர் அவசியமில்லை.டிக்கட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்த இடமாச்சே.


duruvasar
பிப் 23, 2024 15:07

ஸ்டிக்கர் ஓட்டுவது தான் தங்கள் வாழ்வாதாரம் என்று பிழைக்கும் திமுகவிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.


N. Srinivasan
பிப் 23, 2024 13:36

இன்னும் இருக்கிறது பாருங்கள்....நாடு முழுக்க பிரதம மந்திரியின் திட்டம் மூலமாக பல மின்சாரப்பேருந்து வாங்கப்படுகிறது அதற்கு எல்லாம் நாம் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஓட்டுவோம்.....இதை மனதில் வைத்தே இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது புதிய பேருந்துகளை கொண்டு வரும் திட்டம் சொல்லப்பட்டது அதுவும் மின்சாரப்பேருந்து


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை