உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேத்து ராமர்... இன்னைக்கு முருகனா?: திமுக.,வின் திடீர் பாசம்: சீமான் ‛சுருக்

நேத்து ராமர்... இன்னைக்கு முருகனா?: திமுக.,வின் திடீர் பாசம்: சீமான் ‛சுருக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களே இருப்பதால், ராமனை தொடர்ந்து முருகனை பயன்படுத்துகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பு ஏற்காதாம். யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கேவலம். திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி எனக்கூறிய ரகுபதியை திமுக தலைவர்கள் ஒருவரும் கண்டிக்கவில்லை. வாடகை வாய்களும் பேசவில்லை. திடிரென தி.மு.க.,வினருக்கு கடவுள் முருகன் கண்ணுக்கு வந்திருக்கிறார். முருகன் முப்பாட்டன் என நான் கூறிய போது என்னை விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதினர். நாங்கள் வேல் எடுத்தால் மட்டும் தமிழகம் நாடு நாசமாகி விடுமா? தி.மு.க.,வினரை யார் எதிர்த்தாலும், அவர்களை சங்கி என்று கூறுகிறார்கள். அவர்களை எதிர்த்து யாராவது பேசினால், மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று கூறுகிறார்கள். திடீரென முருகன் உங்கள் கண்ணுக்கு வருவதன் காரணம் என்ன? தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களே இருப்பதால், ராமனை தொடர்ந்து முருகனை பயன்படுத்துகின்றனர். முத்தமிழ் முருகன் மாநாட்டில் குறைந்தது 20 நிமிடங்கள் முதல்வர் ஸ்டாலின், முருகனை பற்றி பேசுவாரா அருணகிரி நாதர் எழுதியதை பாட வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராமகிருஷ்ணன்
ஆக 05, 2024 12:12

தமிழனா, தெலுங்கனா, எந்த மொழிகாரனும் அண்ணன் சீமாண்டியிடம் சான்றிதழ் பெற வேண்டும். அதற்கான ஏக போக உரிமை அவருக்கு கொடுக்க பட்டுள்ளது. இப்போது யார் யார் எந்த தெய்வத்தை கும்பிட வேண்டும், திட்ட வேண்டும் என்று சீமாண்டி தான் நிர்ணயம் செய்வார். கால கொடுமை என்பது இது தான்டா.


k Venkatesan
ஆக 07, 2024 11:07

கடவுளே இல்லை என்று சொல்லும் பகுத்தறிவாதிகள், தேர்தலுக்காக ராமர் ஆட்சி, கிருஷ்ணர், முருகன் என்று சொல்லி மக்களிடம் பொய் வேஷம் போடுகின்றனர் என்று சகோதரர் சீமான் சொன்ன விசயத்தை திசை திருப்பி கருத்து போடும் நீர் நிச்சயம் ராமகிருஷ்ணனாக இருக்க முடியாது. ஏன் இந்த பித்தலாட்டம்?


Yasararafath
ஆக 04, 2024 22:34

எந்த ஆட்சி செய்தாலும் மது எப்போது ஒழியுமோ?


Kasimani Baskaran
ஆக 04, 2024 22:20

ஆதீம்க்காவிலிருந்து பஞ்சம் பிழைக்கப்போன பலர் பட்டை அல்லது குங்குமம் வைத்து பகுத்தறிவு இல்லை என்று ஒத்துக்கொண்டு தீம்காவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுத்த பக்கம் ஓசிச்சோறு போன்ற கூட்டங்களும் உண்டு. அவரவர் தங்களது கொள்கைகளை அவிழ்த்து விடுவார்கள். தீம்காவின் கொள்கை என்பது முக குடும்பத்தால் சந்தர்ப்பத்துக்கு தகுந்தது போல மாற்றி அமைக்கப்படும்.


S. Narayanan
ஆக 04, 2024 21:59

திமுக வின் நாடகங்களை எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். நடந்து முடிந்த லோக்கல் எலக்சன் மக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற முடிந்தது. ஆனால் வரும் 2026 சட்டசபை தேர்தல் திமுக வுக்கு சாதகமாக இருக்காது. எப்படி என்றால் திமுக கூட்டணி கட்சிகள் திமுக விக்கு எதிராக செயல் படும் மேலும் பா. ஜ மற்றும் விஜய் கட்சிகள் ஓட்டை பிரிக்கும் போது புதிய கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க முடியும். அதனால் திமுக என்ன செய்தாலும் தோல்வி தான் நிச்சயம்


Venkatesan N
ஆக 04, 2024 21:50

தேர்தல் முடிந்தவுடன், சனாதனத்தை ஒழிப்போம்


Barakat Ali
ஆக 04, 2024 19:54

திமுக மீதான கோபம் ஏதாச்சும் கொஞ்சநஞ்சம் இருந்தா அதைகைவிட்டு திரும்பவும் ஓட்டு போட்டுங்க .....


M Ramachandran
ஆக 04, 2024 19:47

என்ன எய்வது பதவி ஆசை பாடா படுத்தது


M Ramachandran
ஆக 04, 2024 19:46

உங்களுடைய முப்பாட்டனாய் தீ மு க்கா காரன் சொந்தம் கொண்டாடினால் உஙகள் அடி மடியிலே கை வைக்கிறான் என்று உஙகளுக்கு கோபம் வருவது உண்மை.


Ms Mahadevan Mahadevan
ஆக 04, 2024 19:38

எல்லோரும் ஓட்டு வாங்க எல்லாவேஷமும் போடுவாங்க.மக்கள் உஷாரா இருங்க வேண்டும்.


V RAMASWAMY
ஆக 04, 2024 19:32

ஐயோ பாவம், அவரை ஏன் சீமான் அவர்கள் வம்புக்கு இழுக்கிறார், அவருக்குத்தான் எழுதிக்கொடுப்பதையே சரியாக படிக்க முடியவில்லையே?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை