உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வாக்காளர் பெயர் சேர்த்தல் கட்சிகளின் ஒப்புதல் அவசியமா?

 வாக்காளர் பெயர் சேர்த்தல் கட்சிகளின் ஒப்புதல் அவசியமா?

சென்னை: தற்காலிக முகவரி மாற்றம் ஒரே தொகுதிக்குள் இருந்தால், அரசியல்வாதிகளின் ஒப்புதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 80 சதவீதத்திற்கு மேல், கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கணக்கீட்டு படிவத்தை ஏற்கும் ஓட்டுச்சாவடி நிலைஅலுவலர்களுக்கு, மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தற்காலிகமாக ஒரே தொகுதிக்குள் வாக்காளர் இடம் மாறி இருந்தால், அவரது பெயரை, அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் கட்சிக்காரர்கள் ஒப்புதலில் சேர்க்கலாம். அதேபோல, வேறு தொகுதியில் இருந்தாலும், இந்த நடைமுறையை பின்பற்றி, வாக்காளர் பட்டியலில் அவரது பெயரை சேர்த்து கொள்ளலாம். நிரந்தரமாக இடம் மாறி இருந்தால், அரசியல் கட்சியின் ஒப்புதலின்படி, அத்தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கலாம். குறிப்பாக, உள்ளூர் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:

அரசியல் கட்சிகளின் ஒப்புதல்படி வாக்காளர் பெயர், நீக்கம், சேர்த்தல் என்பது கிடையாது. அதேநேரம், அதிகாரிகளை விட, அந்தந்த உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தான், வாக்காளர்கள் குறித்த விபரம் முழுமையாக தெரியும். எனவே தான், அவர்கள்ஆதரவுடன் ஓட்டுச்சாவடிநிலை அலுவலர்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு கட்சி சொல்வதை தான் கேட்க வேண்டியதில்லை. அனைத்து கட்சிகளின் ஒப்புதலின்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை