உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொல்லியல் துறை ஆவணம் போலியா? போஸ்டர் ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு!

தொல்லியல் துறை ஆவணம் போலியா? போஸ்டர் ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மேற்கு பகுதியில், புறம்போக்கு இடத்தில் வசித்த, 48 குடும்பத்தினருக்கு, கோவில் தோற்றத்தை மறைப்பதாக கூறி, தொல்லியல் துறை உரிய இழப்பீட்டு தொகையுடன், 1988ல் மாற்று இடம் வழங்கியது. இதற்காக தொல்லியல் துறை, வரைப்படத்துடன் கூடிய ஒரு ஆணையை மாவட்ட நிர்வாகம் வாயிலாக வழங்கியது. ராஜராஜன் நகர் என்ற பெயரில், அங்கு 48 குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போது, அரண்மனை தேவஸ்தானம் நிர்வாகம், அந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, மாத வாடகை செலுத்த கூறி மிரட்டுவதாக அப்பகுதியினர் புகார் எழுப்பியுள்ளனர்.இது குறித்து, தொல்லியல்துறை, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து மக்கள் மனு அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தொல்லியல்துறை, மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு வழங்கிய ஆவணம் போலியா எனவும், மீண்டும் பழைய இடத்திற்கு குடிபெயரும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அரண்மனை தேவஸ்தானம் தரப்பில் கூறியதாவது:

நம்பி நாகம்மாள் என்பவருக்கு வழங்கப்பட்ட அந்த இடம், தேவஸ்தானத்துக்கு சொந்தமானது. அதன் அடிப்படையில் தான் வாடகை நிர்ணயம் செய்துள்ளோம். சிலர் வாடகை செலுத்துவதாக ஒப்புக் கொண்டனர். சிலர் இதை பிரச்னையாக மாற்றுகின்றனர்.இவ்வாறு கூறப்பட்டது.அப்பகுதியை சேர்ந்த இளங்கோவன் கூறியதாவது:நாங்கள் வசிக்கும் இடம் மத்திய தொல்லியல் துறையால் வழங்கப்பட்டது. தொல்லியல்துறை, கலெக்டர் வழங்கிய ஆவணங்கள் செல்லாது என, தேவஸ்தானம் ஊழியர்கள் கூறுகின்றனர். இம்மாத இறுதியில் வீடுகளை இடித்து விடுவோம் என, மிரட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh
மார் 17, 2024 23:25

கடந்த 70 ஆண்டுகளாக திராவிடிய கட்சிகளின் போதனையால் பெரும்பாலான இந்து மதத்தை சார்ந்த மக்கள் மத நம்பிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை. முக்கியமாக நாற்பது வயதுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கையில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. நமது இறை தலங்களுக்கு ஏதேனும் சங்கடங்கள் வந்தால் அதை எதிர்ப்பதில்லை. இலகுவாக கடந்து சென்று விடுகின்றனர். அதனால் எந்த கோயில்களில் எல்லாம் பிரச்சினை வருகிறதோ அவ்விடங்களில் உள்ள கோயில்களை அகற்றிவிட்டு மசூதிகளும் தேவாலயங்களும் கட்டி விடலாம். அப்போது இந்த தொந்தரவு எல்லாம் வராது. அதனால் பெரும்பாலானோர் நிம்மதி அடைவர்.


NicoleThomson
மார் 17, 2024 10:50

எப்படியோ கோவில் இடம் பறிபோவது அறியாமல் சண்டை, வாழ்த்துக்கள் இந்துக்களே


அமுதன்
மார் 17, 2024 10:27

ஆன்டி ஹிந்து drug mafia kumbal ஆட்சியில் இதெல்லாம் நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.


Sathyasekaren Sathyanarayanana
மார் 17, 2024 09:12

தொல்லியல் துறைக்கு அந்த நிலத்தை கொடுத்தது யார்? தேவஸ்தானத்தின் இடத்தை பிறருக்கு கொடுக்க தொல்லியல் துறைகும் கலெக்டர் கும் யார் உரிமை கொடுத்தது? அவர்கள் வீடு அப்பா இடமா? முப்பது ஆண்டுகள் ஆனாலும் ஆக்கிரமிப்பு தானே, வாடகை கொடுக்க ஏன் மறுக்கிறார்கள்? கோவில் இடத்தை ஆட்டை போடுவார்கள், சர்ச் மற்றும் மசூதிகளில் வாடகை இல்லாமல் சும்மாவா கொடுக்கிறார்கள்?


VENKATASUBRAMANIAN
மார் 17, 2024 08:21

திமுக பிரமுகர் யாராவது இந்த இடத்தின் மீது கண் வைத்திருப்பார். இதுதான் திராவிட மாடல்


கதிரேசன்
மார் 17, 2024 07:48

தமிழகம் முழுதும் தத்திகள் நிறைந்திருக்கும் வேளையில் தொல்லியல் துறையில் அறிவாளிகள்.இருக்கப் போறாங்களா? அன்னிக்கி லஞ்சம் வாங்கிட்டு இந்த இடத்தை குடுத்தாங்க. இன்னிக்கி இருக்கிறவனுக்கு என்ன லாபம்? புதுசா மால் வெட்டுங்க. புது பட்டா குடுத்திருவாங்க. அடுத்த முப்பது வருஷம் ஓட்டலாம்


VSaminathan
மார் 17, 2024 07:06

அது மட்டுமா?மீனாட்சியம்மன் கோவிலில் தரப்படும் பிரசாதமான லட்டு சிறியதாக மாறிவிட்டது-விடியல் ஆட்சி முடியுமுன் உலகிலேயே இல்லாத வகையில் ஒரு பூந்தியை எடுத்து உருட்டு இதுதான் லட்டு எனக்கூறி பக்தரகள் கையில கொடுத்தாலும் கொடுப்பர்-மதுரை கோவில்களில் அறநிலையத்துறையில் நூற்றுக் கணக்கான திருடர்கள் புகுந்து விட்டனரோ என சந்தேகம் வருகிறது-தி மு க ஆடசி வந்தாலே இதே தொல்லைதான்.


ஆதித்தியன்
மார் 17, 2024 07:50

ஓசீல எது குடுத்தாலும். முண்டியடித்துக்.கொண்டு வாங்குறவன் இருக்கிற வரை ....


சபேசன்
மார் 17, 2024 09:32

ஹி..ஹி..


Kasimani Baskaran
மார் 17, 2024 07:04

தொல்லியல்த்துறையல்ல அது தோல்லையியல்த்துறை போல தெரிகிறது. நஷ்ட ஈடு கொடுப்பது வேறு இடத்தில் கொடுக்காமல் கோவில் இடத்தில் கொடுத்தது கேடித்தனம். கூடுதலாக கோவில் நிலத்துக்கு வேறு ஒரு கோஷ்டியை விட்டு வாடகை வசூலிப்பது அதை விட கேடித்தனம்.


மேலும் செய்திகள்