உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? கேட்கிறார் அன்புமணி!

பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? கேட்கிறார் அன்புமணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: 'பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? வட மாவட்டங்களில் மட்டும் பாரபட்சம் ஏன்?' என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.கடலூர் அருகே கண்டகாட்டில் பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பாதிக்கப் பட்டவர்களுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி மருத்துவப் பரிசோதனை செய்தார். அவர் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருந்து வழங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lpplyrsq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை அதிகரிக்க வேண்டும். மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் கூட வெள்ள பாதிப்புக்காக ரூ.6 ஆயிரம் பெற்றனர். கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மக்கள் பாவம் செய்தவர்களா? சென்னை, தூத்துக்குடி மக்கள் மட்டும் புண்ணியம் செய்தவர்களா?

நிவாரணம்

சென்னையில் வெள்ளம் வடிந்தும் 3வது, 6வது மாடியில் இருந்தவர்களுக்கு கூட ரூ.6 ஆயிரம் நிவாரணம் பெற்றனர். சென்னை, தூத்துக்குடிக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. கடலூர், விழுப்புரத்திற்கு மட்டும் ரூ.2 ஆயிரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரபட்சத்துடன் நிவாரணம் அறிவிப்பது தான் திராவிட மாடல் அரசா? வட மாவட்டங்களில் மட்டும் பாரபட்சம் ஏன்? அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் பாதிக்கப்பட்ட வீட்டைக்கூட சுத்தம் செய்ய பயன்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
டிச 09, 2024 05:22

தலைவலி மாத்திரை ரெண்டு ரூவா. ஜுர மாத்திரை 10 ரூவா. கேன்சர் மாத்திரை 100 ரூவா. மருத்துவருக்கு தெரியுமோ? நர்ஸ் சம்பளம்10000 ரூவா. டாக்டர் சம்பளம் 50000 ரூவா. சர்ஜன் சம்பளம் 200000 ரூவா. தெரியுமா டாக்டரே.


அப்பாவி
டிச 09, 2024 01:34

இவரு இன்னும் மருத்துவம் பார்க்கும் உரிமம் வெச்சிருக்காரா?


SIVA ANANDHAN
டிச 08, 2024 18:22

தூத்துக்குடி 100 சென்டிமீட்டர் . கடலூர் விழுப்புரம் 45 சென்டிமீட்டர் .தூத்துக்குடி சென்னை என்றால் ஏன் இந்த வன்மம் அன்புமணியாரே .அரசியல் செய்ய தெரியவில்லையே அய்யா


sankar
டிச 08, 2024 18:20

சரியான கேள்வி...


T.sthivinayagam
டிச 08, 2024 17:17

கூட்டனி பாஜகா அரசையும் கேட்கிறார் என எடுத்துக்கொள்ளாமா


K.n. Dhasarathan
டிச 08, 2024 15:54

மருத்துவர் அன்பு மணி அவர்களே அருமையான கேள்வி, நல்லா கேட்டிர்கள், ஆனால் ஒரு சந்தேகம், உங்கள் கூட்டணி தலைவர், அதுதான் பிரதமர், நமது தமிழகம் புயல் வெள்ளம் பாதித்தபோது என்ன செய்தார் ? ஒரு ரூபாய் கூட கொடுக்களையே அதையும் கேட்டால் நன்றாக இருக்கும், மூன்று குழுக்கள் வந்து பார்த்தது, நிதி அமைச்சர், மற்றும் ராணுவ அமைச்சர் பார்த்தார், ஆனால் நம்ப ஐந்து வைத்து துரோகம் பண்ணியது யார் ? இது என்ன மாடல் ? குஜராத்திற்கு பாதிப்பு என்றதும் அடுத்த நாளே 1000 கோடி கொடுத்த பிரதமர், தமிழ் மக்களை மட்டும் மனிதர்களாகவே நினைக்கலை, விலங்குகளாக கூட நினைக்கலை, கண்டிப்பாக அனுபவிப்பார்கள்.


sankar
டிச 08, 2024 18:21

இந்த துவேசம் தவிர திராவிட மாடலுக்கு வேறு ஒன்றும் தெரியாது - நல்ல வளர்ப்பு


Dhandapani.R
டிச 08, 2024 15:06

அன்னைக்கே தலைவர் சொன்னார் ஓட்டு போட்டவங்களுக்கு போடாதவங்களுக்கு எல்லோருக்கும் செய்யறம்நாங்க! செய்வாங்களா இது நம்ம தப்பு


ஆரூர் ரங்
டிச 08, 2024 14:07

மாடியில் வசிப்பவர்களுக்கும் வெள்ளத்தால் குடிநீர், சாக்கடைப் பிரச்சினைகள் ஏற்பட்டன.அதனால் சுகாதாரக் குறைவுகள் ஏற்பட்டன. வெளியில் போய் பொருட்களை வாங்க முடியாமல் பட்டினியில் தவித்தனர். கட்டிடங்கள் பழுதாகின. தண்ணீரில் மூழ்கி சைக்கிள், இரு சக்கர வாகனங்கள் பழுதாகி நஷ்டம் ஏற்பட்டது. இதெல்லாம் மேட்டுக்குடி ஆட்களுக்கு புரியுமா?.


Indian
டிச 08, 2024 12:59

நாடக உலகம். ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை