உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்டியல் பணம் முழுவதும் அதிகாரிகளுக்கு சம்பளமா?: எச்.ராஜா குமுறல்

உண்டியல் பணம் முழுவதும் அதிகாரிகளுக்கு சம்பளமா?: எச்.ராஜா குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி: ''கோவில் உண்டியல் பணம் அனைத்தும், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் சம்பளத்திற்கே போகிறது,'' என, எச்.ராஜா கூறினார்.

பரமக்குடியில் அவர் நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் மூன்று கோவில்களில், நெரிசலால் பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். திருச்செந்துாரில் பக்தர் இறந்த அடுத்த நாள், ராமேஸ்வரத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர் இறந்துள்ளார். அதற்கு அடுத்து, தஞ்சாவூரிலும் ஒருவர் இறந்துள்ளார். ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த துறை அமைச்சராக இருக்கும் வரை, இதற்கெல்லாம் எந்த தீர்வும் இருக்காது. இறந்தவரின் குடும்பத்தாரிடம் இருந்து, 'ஏற்கனவே அவருக்கு உடல் நலம் சரியில்லை' என, எழுதி வாங்கிக் கொண்டு, போலீசார் உடலை ஒப்படைத்துள்ளனர். கோவிலில் நுழைவது முதல் தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம் என அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வளவு வசூல் செய்தும் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. ஒரு இணை ஆணையருக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கின்றனர். பக்தர்களின் உண்டியல் பணத்தில் பல கோடி ரூபாய் சம்பளத்திற்கு போகிறது. கோவில்களில் ஆம்புலன்ஸ், டாக்டர் வசதி தேவை. தமிழக பாடநுால் கழகத்தில் முறைகேடு நடந்து, மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சினிமா பாடல் பாடும் ஒருவரை, பாடநுால் நிறுவன தலைவராக நியமித்தால் இப்படித்தான் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

எஸ் எஸ்
மார் 20, 2025 12:12

இது உண்மையா என்று அரசு விளக்கம் தர வேண்டும். ஏன் எனில் அறநிலையத்துறை ஊழியர்களும் அரசு ஊழியர்களே. அவர்களுக்கும் மக்கள் வரிப் பணத்தில் இருந்து மற்ற துறை ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படுவது போலவே தரப்படவேண்டும்


Rasheel
மார் 20, 2025 11:38

உண்டியல்களில் நடக்கும் அநியாயம் பார்த்து இறைவனே ஓடி விடுவான். ஏழைகளுக்கும், வசதி இல்லாத அர்ச்சர்களுக்கும் சாதி வித்தியாசம் பாராமல் உதவுங்கள். இதில் கிராமத்து கோவில்கள் பூசாரிகள், ஓதுவார்கள் மிக ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவுங்கள். உண்டியலில் தங்கம் வெள்ளி போடுவதை அதிகாரிகள் பங்கு போடுவதை பலர் பார்த்து உள்ளனர். கணக்கில் வராது.


முருவன்
மார் 20, 2025 10:51

உண்டியலில் காசு போடாதீங்க. வருமானம் குறைஞ்சா அறநிலையத்துறை ஓடிரும்.


vbs manian
மார் 20, 2025 08:45

எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் அந்த பரம்பொருளுக்கு மக்கள் அளிக்கும் பணத்தில் கை வைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்ன தண்டனை நிச்சயம் உண்டு.


Rajarajan
மார் 20, 2025 06:10

கடவுள் மறுப்பு ஆட்சியாளரிடம், கோவில் துறை. ஹை, இது நல்லா இருக்குன்னே, ஆனா புதுசாவும் இருக்குன்னே.


மூர்க்கன்
மார் 21, 2025 05:33

பக்தி வேறு ? நிதி நிர்வாகம் வேறு ? புரிஞ்சிக்கிட்டவன் சாமி புள்ள புரியாதவன் கைப்புள்ள


D.Ambujavalli
மார் 20, 2025 05:56

மாநில அரசின் மாற்றத்துறைகளுக்கும் இவ்விதம்தான் அந்தந்தத்துறை வருமானத்தில் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வுஊதியம் தருகிறார்களா ?


நிக்கோல்தாம்சன்
மார் 20, 2025 05:55

தமிழ்நாட்டை கெடுத்து குட்டிசுவராக்கும் வல்லமை அந்த குடும்பத்துக்கே உண்டு , அடுத்த முறையும் அவர்களிடமே ஆட்சியை கொடுங்க , பெத்த ராஜ் ஊரு ஊருக்கு ரேஸ் நடத்துவா , பாலிடாயில் பங்கு தனது பாட்டுக்கு செங்கல்லை தூக்கிட்டு அலையும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை