உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இருக்கிறதா: கேட்கிறார் சீமான்

சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இருக்கிறதா: கேட்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொன்னேரி: '' தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஓழுங்கு இருக்கிறதா. ஒழுங்கற்ற கூட்டத்திடம் சட்டம் ஒழுங்கு இருக்கிறது,'' என என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த கூட்டம் ஒன்றில் சீமான் பேசியதாவது: ஒரு கூட்டம் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தான் வாழ்வார்கள். கீழடியில் 2 ஏக்கர் நிலத்தை தோண்டிவிட்டுஇது தமிழ் நாகரிகம், இந்திய நாகரீகம், இந்திய பண்பாடுஎன பட்டிமன்றம் நடத்தி கொண்டு உள்ளீர்கள். இதனை இந்திய அரசு ஏன் அங்கீகரிக்க வேண்டும். இது என் நாகரீகம். இவன் என் தந்தை, தாய் என அவன் ஏன் சொல்ல வேண்டும். எனது தாய், தந்தை யார் என எனக்கு தெரியாதாசிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கின்றனர். பா.ஜ., அரசிடம் சி.பி.ஐ., விசாரணை கேட்கின்றனர். ஆனால்,பாஜ.,வை எதிர்க்கின்றனர். இதனை பாமர மக்கள் நம்புகின்றனர்.ஏன் மொத்த இடத்தை தோண்டினால், தமிழரின் தொன்மம் அடையாளம் தெரிந்துவிடும். மறைக்க வேண்டும்.அடித்த அடியில், தற்போது கீழடி தமிழரின் தாய்மடி என்கின்றனர். விழுந்த அடி அப்படி.திராவிடர் என சொன்னது மாற்று கோட்பாட்டுக்கு. ஆனால், இதற்கு பிறகு திருடர் கூட்டம் என்று தெரிந்துஇருந்தால், தமிழன் என்று இதழ் துவங்கியிருந்தால், நாங்கள் தமிழர் என்று முடித்து இருப்பார். முன்னோர்களை புகழ்ந்து கொண்டு இருப்பது பிறவிக்கடமை. இது ஓட்டுக்காக என்று நினைத்தால் அவர்கள் எனக்குபோட வேண்டாம். எதிர்கால குழந்தைகளின் வாழ்க்கைக்காக என்று நினைத்தால், எங்களை ஆதரியுங்கள். ஓட்டுக்காக பேசுகிறார்கள் என்று நினைத்தால் உங்கள் ஓட்டு எனக்கு தீட்டு. எனக்கு போட்டு விடாதீர்கள். இந்த நாட்டுக்காக பேசுகிறார்கள் நினைத்தால், எங்களுக்கு ஓட்டை போட்டு நாட்டை அளியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் இருக்கிறது. ஒழுங்கு இருக்கிறதா. சட்டம் யாரிடம் இருக்கிறது. ஒழுங்கற்ற ஒரு கூட்டத்திடம் சட்டம் அதிகாரம் உள்ளது. அது எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்றும். பாலியல் குற்றம் முதலில் நடக்கும் போது கடுமையான நடவடிக்கை எடுத்து இருந்தால் குற்றம் நடந்து இருக்காது.போலீஸ் ஸ்டேஷனில் மாதர் சங்கங்கள் எனக்கு எதிராக புகார் அளித்தது மகிழ்ச்சி. வரவேற்கிறேன். பெண்களுக்காக எதிர்த்து போராடாதது ஏன் என கேட்ட என்னை எதிர்த்து போராடுவதை வரவேற்கிறேன். நீங்கள் எவ்வளவுதான் என்னை எதிர்த்து போராடுனாலும் என்ன கத்தினாலும் 6 சீட் தான். 90 இடத்தில் இருந்து தேய்ந்து, எங்கு இருக்கிறது என்று கூறும் அளவுக்கு தேய்ந்துள்ளீர்கள்.என்னை எதிர்த்து பேசி 6 இடத்தையாவது தக்க வைத்து கொள்ளுங்கள். காமராஜர் குறித்து திருச்சி சிவாவின் தலைவர் கருணாநிதி அன்று பேசியதை இன்று எடுத்து பேசுகிறார். அன்று பேசும்போது ஒரு கூட்டம் கைதட்டியதால் திருச்சி சிவா எடுத்து பேசுகிறார்.இன்று ஒரு கூட்டம் கிளர்ந்து எழுவதால், தமிழ் இளம் தலைமுறையினர் எழுந்ததால் கலகம் வெடிக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2025 07:05

இவருடைய ஒவ்வொரு பேச்சும் இந்திய திரு நாட்டில் பிரிவினை தூண்டும் விதமாகவே பேசுகிறார். நல்லவர் போல் பேசும் பேச்சில் நாட்டை பிரிக்கும் விஷமத்தனம் இருக்கிறது. மிகவும் ஆபத்தான மனிதர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை