உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து, நாகரிகமின்றி பேசியவரை ஒருவரை கண்டிக்கக்கூட தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அநாகரிகமாகப் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து தமிழக பா.ஜ., நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.தேசத்தின் தலைசிறந்த பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவரை, சிறிதும் மேடை நாகரிகமின்றி பேசிய ஒருவரை எதிர்த்து போராட அனுமதி மறுப்பது தான் தி.மு.க., மாடலா? பல பெண்களையும் ஏன் இந்து மதக் கடவுள்களையும் கொச்சையாக விமர்சித்து வரும் ஒருவரை கண்டிக்கக் கூட தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா? கண்டனப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதைப் பார்த்தால், முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவின் கருத்தை ஆமோதிக்கிறாரா? அல்லது, முதல்வர் தான் இப்படி பேசச் சொல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.சுதந்திர இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் போராடும் உரிமைகளைப் பறித்து தடை விதிப்பது மிகப்பெரும் கொடூரம்.ஆனால், எத்தகைய அராஜகத்தாலும், அடக்குமுறையாலும் நம் தமிழக பா.ஜ., தொண்டர்களை ஒடுக்கி விட முடியாது. எனவே, திட்டமிட்டபடி சென்னையில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் கைகள் கட்டப்படுவதை தமிழக மக்கள் பொறுமையாக பார்த்துக் கொண்டே இருக்க மாட்டார்கள். 2026-இல் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்! எனவே, தாமரை சொந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்! அரசியல் இயக்கங்களின் உரிமைகளை முடக்கப்பார்க்கும் பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Chandru
ஜூலை 02, 2025 20:14

Nainar ji. Your party is toothless and as such fears to act against dmk.


Chand
ஜூலை 01, 2025 16:43

நல்ல தீ மு க சொம்பு


Oviya Vijay
ஜூலை 01, 2025 15:41

தாமரை சொந்தங்கள்...??? அப்படின்னு ஒன்னு இருக்கா... புச்சு புச்சா பேசுறியே நைனா... ஓ... 2026 தேர்தல்ல தாமரை தமிழகத்துல மல்லாந்து போகப் போகுதே... அதே போல இன்னைக்கு போராட்டத்துல எல்லாரும் மல்லாந்து படுத்துக்கிட்டே போராட்டம் பண்ண போறீங்களா???... அதைத் தான் சிம்பாளிக்கா சொல்றீக போல... நடக்கட்டும்... நடக்கட்டும்....


Kjp
ஜூலை 01, 2025 16:22

கருத்து கணிப்பில் திமுகவின் செல்வாக்கு சரிகிறது என்றதும் புச்சா புச்சா திட்டங்கள் வருகிறது.ஓரணியில் திரளணுமாம்.வீடு வீடாய் போய் மக்களிடம் கெஞ்சி கூத்தாடி வோட்டு கேட்கனுமாம்.பயம் வந்து விட்டது.எப்படி பார்த்தாலும் இந்த தடவை திமுகவுக்கு தப்புதான்.


vivek
ஜூலை 01, 2025 16:27

ஓவிய விஜய் உன் வீட்டுல நடந்தாலும் சந்தோஷமா வேடிக்கை பாரப்பான் போல


vivek
ஜூலை 01, 2025 16:28

இதோ வந்துட்டான் தேங்காய் எடுக்க...ஓவியரு


sridhar
ஜூலை 01, 2025 16:48

தாமரை சொந்தங்கள் இருக்கோ இல்லையோ , நிறைய திமுக கொத்தடிமைகள் சுத்திகிட்டு இருக்கு .


guna
ஜூலை 01, 2025 20:31

அ....யோக்கிய விஜய்... அந்த திருபுவனம் கொலை தலைப்பில் உம்மை காணவில்லை....என்ன சொம்பு நீரு


Siva Balan
ஜூலை 01, 2025 15:24

கஞ்சா போதையில் மிதக்கும் முதல்வரிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது தவறு. அதுவும் ஆ....போடும் ராசாவை எதிர்த்து போராட்டமா. .... தலைமை குடும்பத்து பெண்களுக்கு பதில் சொல்லனுமே....


sridhar
ஜூலை 01, 2025 16:49

குறும்பு ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை