உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விநாயகர் சிலைகளுக்கு இப்போதே நிபந்தனையா?: ஹிந்து முன்னணி கண்டனம்

விநாயகர் சிலைகளுக்கு இப்போதே நிபந்தனையா?: ஹிந்து முன்னணி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை திசை திருப்ப, ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் முயற்சி செய்கிறார்' என ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் வெளியிட்ட அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தி விழாவில் புதிய சிலைகள் வைக்கக்கூடாது என கூறப்பட்டு உள்ளது. மக்கள் மீது காவல் துறையினர் காட்டும் வன்முறை என்பது, திராவிட மாடல் அரசு நிர்வாகத்தின் படுதோல்வி. அதற்கான ஆலோசனை கூட்டத்தில், சம்பந்தமே இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா நிபந்தனையை சேர்த்து அறிவித்தது, பிரச்னையை மூடி மறைத்து, திசை திருப்ப நடக்கும் முயற்சி.தி.மு.க., கூட்டணி கட்சியினர், ஹிந்துக்களுக்கு எதிராக தினந்தோறும் ஏதாவது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர். அவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி, தி.மு.க., அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால், ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூட அனுமதி மறுப்பதோடு, சம்பந்தமே இல்லாத நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டம் முதல், முருக பக்தர்கள் மாநாடு வரை நீதிமன்றத்தை நாடியே அனுமதி பெற வேண்டியுள்ளது. எந்தவித வேறுபாடின்றி, தமிழக ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது விநாயகர் சதுர்த்தி விழா. அதற்கு, இப்போதே நிபந்தனைகள் விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதை திசை திருப்ப, ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் இதுபோல் அறிவித்தது கண்டிக்கத்தக்கது. யார் தடுத்தாலும், விநாயகர் சதுர்த்தி திருவிழா, மக்கள் ஒற்றுமை விழாவாக வழக்கம்போல நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V RAMASWAMY
ஜூலை 04, 2025 19:31

இது ஆன்மீக சமத்துவ மாடல் என்று தாங்களே கொண்டாடிக்கொண்டிருக்கும் அரசு. வெறும் கண்டனங்கள் போதாது, அவை ஏதோ ஒரு மிருகத்தின் மீது விழும் மழைத்துளிகள் மாதிரித்தான் இருக்கும்.


Palanisamy T
ஜூலை 04, 2025 15:25

முதல்வர் அவர்கள் திராவிட ஆட்சி மதசார்பற்ற ஆட்சியென்று மீண்டும் மீண்டும் அடிக்கடி ஞாபகப் படுத்துவது போல் மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஏன்? திராவிடமென்பது இந்திய நாட்டு வரலாற்று உண்மை. இயற்கையை சார்ந்தது சைவ சமய கொள்கைகளோடு சார்ந்தவை. மதங்களுக்கெல்லாம் முந்தியது. இதில் எப்படி மத சார்பற்ற கொள்கை உள்ளே புகுந்தது.


Thangaiahnadar Senthil kumar
ஜூலை 04, 2025 14:51

தமிழ் இந்து மக்கள் உணர வேன்டும் திருட்டு திராவிடத்தை விட்டு நேர் வழி வர வேண்டும் இந்து முன்னணிக்கு இயக்கத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் வெல்லட்டும் தமிழன் வீழ்த்தட்டும் திராவிடத்தை......


Sivagiri
ஜூலை 04, 2025 14:19

பாபரின் ஜெசியா வரி, இன்னும் வழி வழியா, வந்திட்டு இருக்கு போல . . .


visu
ஜூலை 04, 2025 15:29

அது அவுரங்கஸீப் போட்ட வரி பாபர் அல்ல


ManiK
ஜூலை 04, 2025 09:25

எல்லா முக்கியமான பதவிகளிளும் இந்த கிருப்டோ அல்லது கன்வர்ஷன் கும்பலைதான் திமுக அரசு நியமித்துள்ளது. அடுத்து வேறு ஆட்சி வந்தால் இதை களையெடுக்கவே ஒரு ஸ்பெஷல் டிப்பார்ட்மென்ட் தேவைப்படும். ஹிந்து முன்னணி ஏற்ப்படுத்தும் விழிப்புணர்வு தான் இவனுங்களுக்கு முதல் எதிரி.


SUBBIAH RAMASAMY
ஜூலை 04, 2025 20:19

நீங்க சரியா சொன்னீங்க. தலைமை செயலகத்தில் கிட்டதட்ட மொத்த செயலாளர்களும் இந்த கிரிப்டோ கிறிஸ்டியன்கள் தான். இப்போது காவல்துறையிலும் எல்லா மாவட்டங்களிலும். அவர்களே. அடுத்த அரசுக்கு இவர்களை களையெடுக்க குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் ஆகும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை