உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெய்டா, இல்லை கட்சி கூட்டமா: அமைச்சர் துரைமுருகன் வீடு முன் சேர் போட்டு அமர்ந்த தி.மு.க.,வினர்!

ரெய்டா, இல்லை கட்சி கூட்டமா: அமைச்சர் துரைமுருகன் வீடு முன் சேர் போட்டு அமர்ந்த தி.மு.க.,வினர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது வீட்டின் முன்பு சேர்களை கொண்டு வந்து போட்டு தி.மு.க.,வினர் அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z92aveaw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, கதிர் ஆனந்துக்கு நெருக்கமான தி.மு.க., பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு ரூ.11 கோடி கொடுப்பதற்காக, இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில், இன்று (ஜன.,03) வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மூன்று கார்களில், ஆறு அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடத்தினர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இது தி.மு.க.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சரின் வீட்டில் ரெய்டு நடப்பது குறித்து தகவல் அறிந்த தி.மு.க., தொண்டர்கள், டெம்போவில் வாடகைக்கு சேர்களை எடுத்து வந்து, விஷேச வீடுகளில் அமர்வது போல, வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

SIVA
ஜன 07, 2025 13:47

ஏம்ப்பா எல்லாரும் இங்கயே இருகிங்க


Karthik
ஜன 04, 2025 14:20

அதுக்கு பேர்தாங்க விடியல்.. சீக்கிரமே விடிஞ்சிரும்.


Gopalasamy.k
ஜன 04, 2025 12:12

எந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் அறிவு கெட்டவர்கள் என்பதற்கு கூடியுள்ள கும்பல் சாட்சி.இதற்கு ஒரு அனுமதியும் தேவையில்லை என்பது என்ன வகை?


தமிழ்வேள்
ஜன 04, 2025 11:16

கருப்பு கொடி ஏற்றி கருப்பு சட்டை போட்டால் கூட பொருத்தமாக இருக்கும்.. ஆனால் இரங்கல் கூட்டத்தில் கூட காக்கா பிரியாணி சாராயம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.


xyzabc
ஜன 04, 2025 08:04

Power of rupees 200.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2025 05:55

வீட்டுக்கு போகும் போது சேரை எடுத்து கொண்டு போகலாம் என்று சேர்க்கபட்ட களவாணிகளின் கூட்டம் இது.


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2025 05:52

வெறும் சேர்கள் போட்டு கூட்டமா உட்கார்ந்து விட்டால் திமுகவினர் பரம யோக்கியன்கள் என்ராகிவிடுமா. கூட்டமாக சேர்ந்து அமலாக்கத்துறை ஊழியர்களை தாக்குதல் செய்தால் கேஸ் ஸ்ட்ராங்கா மாறும். 2 வருடம் ஆனாலும் ஜாமீன் கிடைக்காது. செய்ங்க, திமுகவினர், ரவுடிகள், களவாணிகள் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.


சோலை பார்த்தி
ஜன 03, 2025 22:36

வாங்குன இருநூறு க்கு இத கூட செய்யாட்ட பெறகு எதுக்கு கட்சி யில இருக்கனும்


கண்ணா
ஜன 03, 2025 22:15

₹200 உபிஸ் என்ன சொன்னாலும் செய்வாங்க......


Raghavan
ஜன 03, 2025 22:13

எங்கே காணவில்லை கேட் கீப்பர் பாரதி. அவர்தான் இதுபோல் ரெய்டு நடக்கும்போது வீட்டின் முன்பு உள்ள கேட்டை பிடித்ததுக்கொண்டு காவலுக்கு நிற்பார். உட்கார்ந்து இருப்பவர்களை பார்த்தால் 200 க்கும் 500 க்கும் காத்திருப்பவர்களைப் போல் உள்ளது. இந்த வழக்குகள் எல்லாம் முடிய குறைந்தது ஒரு 15 முதல் 20 வருடங்கள் ஆகும். கடைசியில் அரசாங்க தரப்பில் போதுமான ஆதாரங்கள் இல்லாததனால் வழக்கு தள்ளுபடி என்று ஒரு நீதிபதி கொடுப்பார் . இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்பு.


புதிய வீடியோ