உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  இதுதான் திராவிட கட்சிகளின் ஆட்சி சாதனையா: சீமான்

 இதுதான் திராவிட கட்சிகளின் ஆட்சி சாதனையா: சீமான்

சென்னை: 'முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வெழுதிய 85,000 பேர், தமிழ் மொழி பாடத்தில் 20 மதிப்பெண் கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்திருப்பது தான் திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறை' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் தாய்மொழி எந்த அளவிற்கு தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாய்மொழி தெரியாமலேயே இரண்டு தலைமுறை பட்டம் பெற முடியும் என்ற மோசமான நிலையை உருவாக்கியது தான், 60 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியின் சாதனை. திராவிட ஆட்சியில், தமிழ் வழிபாட்டு மொழியாகவும் இல்லை; வழக்காடு மொழியாகவும் இல்லை. இனியாவது, தமிழ் மொழியை வளர்ப்பதற்கான ஆக்கப்பூர்வ திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில், தமிழ் மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ