உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.எஸ்., அமைப்பில் ஆண்டுக்கு 1,000 பேர் சேர்க்க இலக்கு: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்

ஐ.எஸ்., அமைப்பில் ஆண்டுக்கு 1,000 பேர் சேர்க்க இலக்கு: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்

சென்னை: 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, ஆண்டுக்கு 1,000 பேரை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வந்தோம்' என, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, ஜமேஷா முபின் பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 18 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ileffn5s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அபு ஹனீபா, 33; பவாஸ் ரஹ்மான், 36; சரண், 25, ஆகியோரை, மூன்று நாட்கள் காவலில் எடுத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அபு ஹனீபா அளித்துள்ள வாக்குமூலம்:

இலங்கையில், 2019ல் ஈஸ்டர் நாளில், சர்ச் உள்ளிட்ட இடங்களில், தொடர் குண்டு வெடிப்பு நடத்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்தோம். எங்களுக்கு, சஹ்ரான் ஹாசிம், சென்னை மண்ணடி மற்றும் கோவையில் ரகசிய பயிற்சி அளித்தார். அவருக்கு அடுத்த நிலையில், ஜமேஷா முபின் செயல்பட்டு வந்தார். அவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் எங்களுக்கு, துப்பாக்கி சுடுதல் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்தார். எங்களுக்குள் தகவல் பரிமாற்றம் சங்கேத மொழியில் நடந்து வந்தது.கேரள மாநிலம் மற்றும் கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உடற்பயிற்சிக் கூடங்கள், அரபு கல்லுாரிகளை, ஆயுத பயிற்சி அளிக்கும் இடமாக பயன்படுத்தி வந்தோம். ஆண்டுக்கு 1,000 பேரையாவது ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்க வேண்டும் என, சஹ்ரான் ஹாசிம் இலக்கு நிர்ணயித்து இருந்தார். அதற்கான பணிகளை முழுவீச்சில் கவனித்து வந்தோம். எங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட நபர்கள், வேறு சில பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். இதனால், அவர்கள் எங்களின் எதிரி பட்டியலில் இடம்பெற்றனர். கோவை ஈஸ்வரன் கோவிலை தகர்த்து, எங்கள் முதல் வெற்றியாக கொண்டாட இருந்தோம்; அது தோல்வியில் முடிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

shakti
ஜன 02, 2025 14:26

அத்தனையும் பொய்...


பேசும் தமிழன்
ஜன 01, 2025 18:07

அதில் பாதி ஆட்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்க திட்டம் போட்டு இருப்பார்கள்..... இங்கே தான் அது போன்ற எண்ணம் கொண்ட ஆட்கள் அதிக அளவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


என்றும் இந்தியன்
ஜன 01, 2025 17:15

ஆண்டுக்கு 1,000 பேர் தீவிரவாத சேர்க்கை???வெறும் கோவை மட்டுமா??? இல்லை தமிழ்நாடு முழுமைக்குமா??? இல்லை இந்தியா பூராவுமா???புரியலையே


sundar
ஜன 01, 2025 14:56

இவர்களுக்குப் பாராட்டு விழா ஊர்வலம், இறந்தால் சிறப்புப் பேரணிக்கு அனுமதி என்று ஓட்டுக்கு அலையும் கூட்டம் இருக்கும் வரை இந்த விபரீதங்கள் நடக்கும். சிறுபான்மை அரசியல் என்று ஒழிகிறதோ அன்று தான் இதைத் தடுக்க முடியும்.


krishna
ஜன 01, 2025 13:32

THURU PIDITHU IRUMBU KARAM CYLINDER VEDITHU VITTADHU ENA EPPADI URUTTINAAR.


krishna
ஜன 01, 2025 13:25

DESA VIRODHA VERI PIDITHA MOORGA KUMBAL ULAGAM MUZHUVADHUM ORE DESIGN.


S.L.Narasimman
ஜன 01, 2025 12:45

இந்தமாதிரி அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்து கொல்ல நினைக்கும் கொடியவங்களை இரக்கம் பாராது அழித்தொழுக்க வேண்டும்


Sridhar
ஜன 01, 2025 12:26

இவ்வளவு பெரிய விஷயம் நடந்துருக்கு, எதோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி பொம்மை பயல் சாதனை செஞ்ச மாதிரி பேசிகிட்டு திரியறான்? இந்த மேட்டர வெறும் சிலிண்டர் வெடிப்பு னு சொல்லி மூடி மறைக்க பாத்த போலீஸ் முதல் ஆளும் ஆட்சியை சேர்ந்த அசிங்கம் பிடிச்ச பயலுக அத்துணை பேரையும் பிடிச்சு சவுக்கடி கொடுத்து ரோட்டுல கழுத்தை மேல அன்றாவரோட ஊர்வலமா இழுத்து சென்றிருக்கவேண்டாமா? சொல்லப்போனா மக்களோட அடிப்படை வாழ்க்கையே பாதிக்கும் இந்த சதிகார கும்பலை பத்திய செய்திகளை முக்கியத்துவம் கொடுக்காமல் மறைக்க நினைக்கும் ஊடகங்களுக்கும் பலமான சவுக்கடி கொடுத்தே தீரணும் . விசாரணையில் இவ்வளவு உண்மைகள் வெளிவந்தபிறகும், வெட்கங்கெட்ட கும்பல் ஒண்ணுமே நடக்காததுமாதிரி ஓட்டிட்டு திரியறானுங்க.


Kumar Kumzi
ஜன 01, 2025 11:35

அது கார் குண்டு வெடிப்புனு சொல்லாதீங்க ஓங்கோல்க்கு கோவம் வரும் ஓட்டு பிச்சைக்காக வளர்க்கபடும் செல்ல பிள்ளைகள்


Anand
ஜன 01, 2025 11:27

வரும் காலங்களில் இவனும் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பித்து திருட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவான்....