உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அது தானா சேர்ந்த கூட்டம்; இது காசுக்கு வந்த கூட்டமா; கேட்கிறார் திருமாவளவன்!

அது தானா சேர்ந்த கூட்டம்; இது காசுக்கு வந்த கூட்டமா; கேட்கிறார் திருமாவளவன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: 'விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள், அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்ஆர்கானிக் மாஸா' என, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d5k40aaw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: விஜயகாந்த் கட்சி வந்த போது சொன்னார்கள், இந்த கட்சி எல்லாம் காணாமல் போய்விடும். இப்போது விஜய் வந்த உடன் பயங்கரமான ஹைப் கொடுக்கப்படுகிறது. நமது மாநாட்டிற்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள். இது குறித்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோ கூட இல்லை திருமாவளவன், எப்படி இத்தனை லட்சம் பேரை ஈர்க்க முடிந்தது என யாராவது விவாதித்தார்களா? விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள், அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்ஆர்கானிக் மாஸா?

பிரியாணி கொடுத்தோமா?

மாநாட்டிற்கு வர பணம் கொடுத்தோமா? காசு கொடுத்தோமா? பிரியாணி கொடுத்தோமா? என்ன செய்தோம்? அவர்களாக குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு வந்தார்கள். இரண்டு லட்சம் பெண்கள் மாநாட்டில் பங்கேற்றார்கள். யாராவது அதைப் பற்றி பேசினார்களா? எவ்வளவு பெண்கள் வந்தார்கள் என்று பேசினார்களா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என்று யாராவது விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று சொன்னார்களா? சொல்ல வேண்டும் என்று நான் ஆசைப்படவில்லை. யாரும் சொல்ல வேண்டாம். இதுதான் இந்த சமூகம்

போட்டியில்லை

இப்படி தான் அவர்கள் எல்லாவற்றையும் மதிப்பீடு செய்வார்கள். எல்லோரும் நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறார்கள். இவங்களை ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். நான் அடிக்கடி சொல்வேன். யாரும் புதிய புதிய கட்சிகளை துவங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு போட்டியாளராக இருக்க முடியாது. நமது களம் முற்றிலும் வேறானது. இந்த களத்தில் யாரும் நம்முடன் போட்டிக்கு வர முடியாது. நம்மால் மட்டுதான் இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் இன்னும் விழிப்பாக இருப்போம். சமூக ஊடகங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில், நாம் அவசரப்பட்டு எதையும் செய்து விட கூடாது.எங்க போனாலும் மைக் எடுத்துட்டு வந்து, 'சார் நீங்க விஜய்யுடன் போறீங்களா? இ.பி.எஸ்., உடன் போறீங்களா?' என்று திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். ஒரு தடவ சொன்னா உனக்கு புத்தி வரணும், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; எங்கள் கூட்டணி, நானும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. விஜய்க்கு எதுக்கு இவ்வளவு ஹைப்? நம் மாநாட்டிற்கு லட்சக்கணக்கானோர் வந்த போது அதனைத் திரும்பத் திரும்பக் காட்டினார்களா? இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

Ramalingam Shanmugam
நவ 16, 2024 13:07

மாநாடு நடத்த பணம் எங்கிருந்து வந்தது ஆதவா கேட்டா தெரியும் மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது வெட்கம்


mohamed salim Abdullahhussaini
நவ 10, 2024 08:34

தமிழக வெற்றி கழகம் மாநாடு அக்டோபர் 27முடிந்தது அங்கு கூடிய படையை பார்த்து இன்னும் கதறல் சிலருக்கு நிற்கவில்லை ஆம் அது தானா சேர்ந்த கூட்டம் அன்பால் சேர்ந்த கூட்டம் ஒரு கோடிக்கு மேல் சேர்ந்த கூட்டம் யாரும் பணம் கொடுத்து இவ்வளவு கூட்டம் கூட்ட முடியாது த. வெ.க மாநாடு மாபெரும் இளைய சமுதாய கூடல் ஆதரவளித்த தல ரசிகர்களுக்கு என்றும் அன்புடன் நன்றி


M.Karthikeyan
நவ 10, 2024 08:31

எது அந்த மது விளக்க மாநாட்டு வந்த மக்கள் தானே ? மிக்ஸிங் விளக்கம் மிகவும் அருமை.


skv srinivasankrishnaveni
நவ 10, 2024 07:44

வேறுவேளையே iல்லேன்னா 10 ஜால்றாக்கலைவச்சுண்டு கட்ஷி ஆரம்பிக்கவேண்டியது ஆளும்கட்சி ஆளாதகாட்சிக்கூட கூட்டணி வச்சுண்டு ஒருவேளையுமே செய்யாமல் வாழறதுதான் மெயின் வேலை , வெட்டியா சுத்தும் நபர்களே இதுக்களுக்கு எல்லாம் தொண்டர்களாம் பொதுபோகாதவனெல்லாம் கூடுவானுக கூட்டங்களே இதுதான் காண்றாவி அரசியல் உருப்படியா எவனும் ஏதாச்சும் வேலை செய்றானுகளா?vettipeschchu veeraasaamikal


sundaran manogaran
நவ 09, 2024 23:34

நாம் தமிழர் கட்சியைப்போல தனித்து நிற்கும் திராணி இல்லை.எதையாவது பேசி அப்பாவி மக்களை ஏமாற்றும் வித்தை மட்டும் தெரியும் அதற்கு சூட்கேஸ் கிடைக்கும்...


sundaran manogaran
நவ 09, 2024 23:30

சூட்கேஸ் மட்டுமே நோக்கமாக இருக்கும் தனித்துவம் மிக்க கட்சி


ராமகிருஷ்ணன்
நவ 09, 2024 20:25

உட்கட்சி பூசல் ஒரு பக்கம், விசிலடிச்சான் குஞ்சுகளின் ஓட்டுக்களும் போய்விடும் என்று . குருமாவுக்கு குழப்பம் வந்து விட்டது. புலம்பல் அதிகம் வருது.


வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 19:21

நாட்டில் எங்கெங்கோ இருந்துகொண்டு, பிடித்த கட்சிக்கு ஆதாரவாகப் பதிவிடுபவர்களை எப்படி கண்டுபிடித்து, காசு குடுப்பார்கள் என்றும் யாரும் யோசிப்பதில்லை. காசு குடுக்கும் அளவுக்கு திமுக என்ன பைத்தியமா? எதுக்கு பணம் கொடுக்கும்? எப்படி கொடுக்கும்? இதெல்லாம் யோசிக்காம, 200 ரூபாய், கொத்தடிமை என்று உளறிக் கொண்டு ஒரு கூட்டம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 19:16

என் கருத்தை விமர்சிக்காமல் என்னை விமர்சிக்கும் அறிவற்ற மூடர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். நிகழும் 21ஆம் நூற்றாண்டில் அடிமை யா? எங்கே? எப்படி? அறிவற்ற அர்த்தமற்ற சொற்ப்ரயோகம். இந்த காலத்தில் வீட்டு வேலைக்காரனைக் கூட அடிமை போல நடத்த முடியாது.. ஒரு கட்சிக்கு ஆதாரவாக எழுதினால் அடிமையா? அப்போ நீங்கள் எல்லாரும் பாஜக வின் கொத்தடிமைகள் தானா? ஆனால் ஒன்று கவனித்தீர்களா?உங்களைத் தவிர பிற கட்சியினர் யாரும் உங்களை பிஜேபி அடிமை என்றோ மோடியின் கொத்தடிமை என்றோ ஒருபோதும் எழுத மாட்டார்கள். ஏனெனில் நாகரிகமானவர்கள்.


ngm
நவ 09, 2024 20:07

நீ எவ்வளவு கதறினாலும் உன் முந்திரி குட்டை பதிவு நீ ஒரு கொத்தடிமை என நிரூபிகக்கும்


Mohan
நவ 09, 2024 19:04

எம்.ஜி.ஆர்.அவருக்குப்பின் அம்மா ஜெ.- இவர்கள் இருவருக்கு மட்டும் தான் அரசியல் கட்சி தலைவர்கள் என்ற முறையில் மக்கள் தாமாக கூட்டங்களுக்கு வந்தார்கள். அதற்கும் மேல் அவர்கள் வரும்வரை காலை முதல் மாலை வரை காத்துக்கிடப்பார்கள். வேறு எந்த தலைவருக்கும் அந்தமாதிரி கூட்டம் காத்துக்கிடந்ததில்லை. இப்போ நடிகர்களை பார்க்க கூட்டம் கூடுகிறது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தில் 10 ல் ஒரு பங்கு கூட வராது. இப்படி உண்மை நிலவரம் இருக்கும் போது ஏன் திருமாவளவன் வருந்த வேண்டும்???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை