பேசி தீர்க்க வேண்டியது திருமாவும், ஆதவ்வும்
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக, 3,000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மைதான். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தி உள்ளோம். முதல்வரின் உத்தரவை பெற்று, அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக கூறியுள்ளது குறித்து, திருமாவளவனும் ஆதவ் அர்ஜுனாவும் பேசி, பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் எங்கள் கருத்து என்று எதுவும் இல்லை.-- மகேஷ்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்