உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல; எச்சரிக்கிறார் எல்.முருகன்

கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல; எச்சரிக்கிறார் எல்.முருகன்

சென்னை: 'சென்னை வெள்ள விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல' என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில், எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தி மாத கொண்டாட்ட விவகாரத்தில் தி.மு.க.,வின் குற்றச்சாட்டு மக்களை திசை திருப்பும் செயல். மத்திய பா.ஜ., அரசு தமிழுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. எல்லாம் விஷயத்திலும் அரசியல் செய்யக் கூடாது. சென்னை வெள்ளம் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல.

வருமானம்

தி.மு.க., நினைக்கும் அரசியல் எல்லாம் இப்பொழுது பண்ண முடியாது. மக்கள் தெளிவாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தி மொழிக்கு யாரும் ஆதரவாளர்கள் கிடையாது. அதேநேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது. சி.பி.எஸ்.,இ., பள்ளியில் இந்தி ஒரு மொழியாக இருக்கிறது எனக் கூறி பள்ளி நடத்தும் தி.மு.க.,வினர் இழுத்து மூட ரெடியா? இது அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கிறது.

ஏமாற்ற வேண்டாம்!

தி.மு.க.,வினர் ஆக்கபூர்வமான அரசியலை செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒழியுங்கள். தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தீட்டுங்கள். மொழிகளை வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். தமிழை உலக அளவில் எடுத்து செல்வதில் முதன்மையாக இருப்பது பிரதமர் மோடி தான். ஒட்டுமொத்த தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
அக் 19, 2024 19:55

சமீபத்தில் பெய்த மழையை சரியாக எதிர்கொள்ளவில்லை திமுக அரசு.மக்கள் பல இடங்களில் பலவித பிரச்சினைகளை சந்தித்தனர். அதை திசை திருப்பவே கவர்னர் மீது பழி சுமத்தும் நாடகம்.


Dharmavaan
அக் 19, 2024 18:22

வரி விட்டதால் என்ன குடி முழுகிப்போய்விட்டது பத்தாயிரம் பேர் செத்துவிட்டார்களா 50 ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரம் போய்விட்டதா .அல்ப விஷயத்துக்கு எவ்வளவு ஆர்பாட்டம்


Indian
அக் 19, 2024 13:41

ஒரு கவுன்சிலர் சீட் கூட கிடைக்காது ....


Dharmavaan
அக் 19, 2024 17:18

இப்படி அட நாட்டில் காங்கிரஸ் பேசி இப்போது காணாமல் போய்விட்டது


venugopal s
அக் 19, 2024 13:34

சென்னை பெரு மழையைத் திறமையாகக் கையாண்ட தமிழக அரசுக்கு அதைத் திசை திருப்ப வேண்டிய அவசியம் இல்லை! நீங்கள் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் சப்பைக்கட்டு காட்டுகிறீர்கள்!


Dharmavaan
அக் 19, 2024 18:19

ஒன்றும் கையாளவில்லை வருண பகவான் தயவில் மழை நின்றது அவ்வளவே இல்லையேல் போன வருடம போல் சந்தி சிரிக்கும்


Indian
அக் 19, 2024 13:21

தமிழார்களிடேயே ஒற்றுமை இல்லை என்பதற்கு தலைப்பே சான்று ......


Smba
அக் 19, 2024 13:17

தவற தவறுனு ஒத்துக்கனும் உருட்ட கூடாது