உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்

காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் ஈ.வெ.ரா., குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் அண்ணாதுரை.

விவாதங்கள்

பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு. அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.

சமூக நீதி

மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும். சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். காமராஜர் குளிர்சாதன வசதி இல்லாமல் துாங்க மாட்டார். அதற்காக அனைத்து அரசு தங்கும் இல்லங்களிலும் குளிர் சாதன வசதி செய்ய கருணாநிதி உத்தரவிட்டார். அவர் சாகும்போது, கருணாநிதியின் கையை பிடித்து, 'நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்' என திமுக எம்.பி., திருச்சி சிவா பேசியது சர்ச்சையானது. இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.தற்போது அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின், ''காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்'' என சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

theruvasagan
ஜூலை 17, 2025 21:17

அவர் சொல்ல வந்த விஷயமே வேறு. அந்த கட்சியில் யார் பேசினாலும் எப்படியல்லாம் பேசினாலும் மத்தவங்க சர்ச்சையை கிளப்ப வேண்டாம். காமராசர் பற்றி கிளம்பின அவதூறு பேச்சுக்கு வருத்தப்படுகிறார் என்று நீங்கள் நம்பினால் அது உங்க தப்பு.


Raj S
ஜூலை 17, 2025 19:53

கோபாலபுர திருட்டு குடும்பத்துக்கு உருட்டறது கைவந்த காலை... இவளோ நாள் மிசாவுல போனேனு உருட்டல்... தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் அப்டீன்னு ஒரு மெகா உருட்டு... இப்போ உண்மையான தமிழன் காமராஜரை பச்சை தமிழன்னு ஒரு கன்னடன் சொன்னான்னு ஒரு உருட்டு...


V RAMASWAMY
ஜூலை 17, 2025 18:04

கட்சித் தலைவர் என்கிற முறையில் பொது அறிக்கை விடாமல் சர்ச்சையாக பேசியவரை ஏன் கண்டிக்கவில்லை?


A P
ஜூலை 17, 2025 17:50

" கக்கன் கக்கினாரு , காமராஜர் நக்கினாரு " என்று இந்தக் கயவர்கள் பிரச்சாரம் செய்ய, அந்தக் காமராஜரோ " தி மு க வும், அ தி மு க வும் ஒரே குட்டையில ஊரிய மட்டைகள் தான் " என்று ரொம்ப நாகரிகமாகச் சொன்னாரே இந்த வார்த்தைகள் சொன்னவர்களில் யார் கண்ணியமானவர் என்று சொல்லத்தேவை இல்லை.


என்றும் இந்தியன்
ஜூலை 17, 2025 17:12

இந்திய சட்ட விதியின் பிரகாரம் இந்துவுக்கு ஒரு பெண்டாட்டிக்கு மேலே இருந்தால் அது சட்ட விரோதம், அதற்கு தண்டனை உண்டு. ஆமா கருணாநிதிக்கு எவ்வளவு பெண்டாட்டி???அப்போ சட்ட விரோதம் இல்லை இது. அப்படியாப்பட்டவனின் மகனின் பேச்சு பின் எப்படி இருக்கும்??? சட்ட விரோத பேச்சு பேசிய சிவாவை குறித்து விவாதம் நடப்பது சரியல்ல என்று தானே இந்த ஸ்டாலின் பேச்சும் இருக்கும்


Rajah
ஜூலை 17, 2025 17:00

காமராஜர் குறித்து பேசுவதற்கு திமுக , காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இந்த இரு கட்சிகளுமே காமராஜர் அவர்களுக்கு செய்த துரோகங்களுக்கு எல்லையே இல்லை. காமராஜர்மீது பாஜக பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கின்றார்கள். திருச்சி சிவாவை கண்டிக்க பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது.


panneer selvam
ஜூலை 17, 2025 16:57

Why Stalin ji is so afraid of Trichy Shiva ? May be Trichy Shiva may be the custodian of Kalaingar family wealth . So any rubbing with Trichy Shiva will bring disaster to ruling family


ram
ஜூலை 17, 2025 16:54

வயது ஆகிவிட்டது ஓய்வு அறிவித்துவிடலாம், தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்.


sridhar
ஜூலை 17, 2025 19:05

திமுகவுக்கே 75 வயது ஆகி விட்டது


Suppan
ஜூலை 17, 2025 16:43

விடியலாரே உங்கள் தோப்பனார் பேசாத பேச்சா . வெற்றிகொண்டானுக்குப் போட்டியாக அவருக்கே வழிகாட்டியாக காமராஜரைப்பற்றி அவதூறுகளை அள்ளித் தெளித்தார். உங்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது.


V RAMASWAMY
ஜூலை 18, 2025 16:52

ஏறி வந்த ஏணியான மூதறிஞர் என்று அவர்களே போற்றிய திரு ராஜாஜி அவர்களை அரசு கட்டிலில் ஏறியதும் ஆச்சரியார் என்று அவமதித்த நன்றியுள்ளவர்கள் தானே. எதுவும் சொல்வார்கள், செய்வார்கள். குற்றம் அவர்களுடையது அல்ல, வாக்காளர்களுடையதே. இப்பொழுது குத்துதே, குடையுதே என்றால் எப்படி?


Karthik Madeshwaran
ஜூலை 17, 2025 15:52

2013 ஆம் ஆண்டு கருணாநிதியே தனது டிவிட்டரில் காமராஜர் குறித்து தெளிவாக சொல்லியுள்ளார். தான் முதல்வராக இருந்தபொழுது காமராஜர்க்கு AC வசதிகளை செய்து கொடுத்துள்ளேன் என்று. அப்பறம் என்ன எல்லோரும் போயிட்டு வேலைய பாருங்க, ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எல்லாம் பேசிகிட்டு.


sridhar
ஜூலை 17, 2025 19:06

அப்படியே நீங்க அறிவாலயத்துக்கு போய் இன்றைய படியை வாங்கிக்கோங்க .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை