உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,விடம் பணம் பெற்றது உண்மை; திரும்ப கொடுத்ததாக கூறும் கம்யூனிஸ்ட்

தி.மு.க.,விடம் பணம் பெற்றது உண்மை; திரும்ப கொடுத்ததாக கூறும் கம்யூனிஸ்ட்

திருவாரூர் : ''பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது,'' என, மார்க்சிஸ்ட் மாநிலச்செயலர் சண்முகம் கூறினார்.

திருவாரூரில், அவர் அளித்த பேட்டி:

திருவாரூர் மாவட்டத்தில், பிரசாரம் செய்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கம்யூ.,கட்சிகள் போராட்டத்தை கைவிட்டு, ஜால்ரா தட்டுவதாக கூறியிருக்கிறார். அவர், கூறுவது வேடிக்கையாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மா. கம்யூ., எவ்வளவு போராடி இருக்கிறது என, நாளிதழை, படித்து பார்த்தால் தெரியும். நான்கு ஆண்டுகளில், எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க., எத்தனை போராட்டங்களை நடத்தியது. பழனிசாமி, பா.ஜ.,வுடன் சேர்ந்து கொண்டு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கை. நாங்கள் பணம் வாங்கியதாக, 2019ல் இருந்தே பழனிசாமி கூறுகிறார். இதற்கு, 100 முறை விளக்கம் கொடுத்து விட்டோம். தி.மு.க.,விடம், தேர்தல் செலவிற்காக வாங்கிய பணத்தை அப்படியே கொடுத்துவிட்டோம். அதில், சிங்கிள் டீ கூட சாப்பிடவில்லை.'கம்யூனிஸ்ட்டுகள் உண்டியலை கைவிட்டனர்; சூட்கேசை பார்க்கின்றனர்' என, தமிழிசை கூறுகிறார். உண்டியல் குலுக்குவது கேவலம் அல்ல. தேர்தல் பத்திரம் வாயிலாக, அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற பெரும் முதலாளிகளிடம் இருந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பாஜ.,வினர் பெற்று உள்ளனர். பா.ஜ., - அ.தி.மு.க., இடையே கூட்டணி குழப்பம் உள்ளது. அமித் ஷா கூறியதுபோல், கூட்டணி ஆட்சிதான் என, அண்ணாமலை போன்றோர் கூறுகின்றனர். தனி மெஜாரிட்டியுடன் அ.தி.மு.க.,ஆட்சி என, பழனிசாமி கூறுகிறார். இந்த கூட்டணியில் வாசன் மட்டுமே உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Bhaskaran
ஜூலை 25, 2025 05:28

இன்னும் இந்த ஆட்களை நம்பி ஏமாற்றுவதற்கு விவசாயிகளும் தொழிலாளிகளும் இருந்தால் அது அவங்க தலையெழுத்து தான்


தமிழன்
ஜூலை 24, 2025 16:12

பணத்தை வாங்கிக் கொண்டதாக ஸ்டாலின் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை அது மட்டும் இல்லை கடனாக எதற்காக வாங்கப்பட்டது எந்த வகையில் வருமானம் வந்து திருப்பிக் கொடுக்கப்பட்டது அது திமுகவின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்ற எந்த தகவலும் இல்லாமல் பொய் பேசினால் மக்கள் நம்பி விட இது ஒன்னும் கருணாநிதி காலமில்லை


Neethan K
ஜூலை 22, 2025 23:11

ஒன்பது முறை திரு ராஜாஜி அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது.. ஒரு செய்தியாளர் அவரிடம் கேள்வி கேட்டபோது.. நீங்கள் அரசாங்க மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறீர்கள். அவற்றில் எது நல்ல திட்டம்.? எது சுமாரான திட்டம்.?? எது கெட்ட திட்டம்.??? என்று எப்படி கண்டறிவீர்கள் என கேட்டார். அதற்கு திரு ராஜாஜி அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்ன பதில்.. "நாங்கள் ஒரு திட்டத்தை சட்டசபை மூலம் செயல்படுத்தும் போது.. கம்யூனிஸ்டுகள் அவற்றை மிக தீவிரமாக எதிர்த்தார்கள் என்றால்.. விழுந்து புரண்டு எதிர்த்து குரல் கொடுத்தால்.. அது மக்களுக்கு மிக நன்மை பயக்கும் மிக நல்ல திட்டம்." "அப்படி இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒரு திட்டத்தை ஆதரித்தால் அது மிக மோசமான திட்டம் என புரிந்து கொள்ளலாம்.." அவரின் வார்த்தைகள் இன்றைய காலகட்டத்திற்கு எவ்வளவு மிகச் சரியாக இருக்கிறது என பாருங்கள்.


RAMESH
ஜூலை 22, 2025 19:29

இந்தியாவில் உண்டியல் அழிந்து விட்டது.....காம்ரேட் எல்லோரும் திராவிட சேவகர்கள் ஆகி விட்டனர்


Thiyagarajan S
ஜூலை 21, 2025 18:39

அதிமுக எவ்வளவு போராட்டம் நடத்தியது உண்டியல் கம்யூனிஸ்ட் எவ்வளவு போராட்டம் நடத்தியது இதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம் சண்முகம் முதல்ல வாங்குன பணத்தை திருப்பி கொடுத்துட்டேன்னு சொல்ற ஆனா இன்னைய வரைக்கும் உன்னோட முதலாளி இப்பதான் கம்யூனிஸ்ட் திமுக பணத்தை திரும்பி வாங்கி விட்டோம் என்று சொல்லவில்லை அப்புறம் அந்த பணத்தை எப்படி கொடுத்தீர்கள்? தேர்தல் செலவுக்கு வாங்கிய பணம் தேர்தல் செலவு செய்த பின் எப்படி அந்த பணத்தை மீண்டும் சம்பாதித்தீர்கள் சண்முகம் அதை சொல்லுங்க


S Shankar
ஜூலை 21, 2025 00:01

பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறார்கள். இந்த படத்தை திரும்பி வாங்கிக் கொண்டதாக திமுக தரப்பில் ஒத்துக் கொள்ளவில்லையே அதனால் எப்படி கம்யூனிஸ்ட் கட்சி படம் கொடுத்ததை ஒத்துக் கொள்ள முடியும் ஏற்றுக்கொள்ள முடியும்


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 13:53

இதில் யார் யோக்கியர்கள்?.


Subburamu Krishnasamy
ஜூலை 20, 2025 08:55

Now a days, the comrade leaders are living luxurious life. Olden days leaders will dine and stay with workers and party cadres Stay in star hotels, traveling in luxurious vehicles


suresh Sridharan
ஜூலை 20, 2025 08:38

நீ வாங்கியதை அவர் சொல்கிறார் நீயும் அதேதான் சொல்கிறாய் இதற்கு ஏன் இந்த ஆணவம் கம்யூனிஸ்டுகள் போராட்டம் என்று சொல்லும் நீங்கள் திமுக ஊழலை எதிர்த்து எத்தனை முறை போராடினீர்கள் நீங்கள் போராடியதெல்லாம் மத்திய அரசாங்கத்தை மட்டுமே மாநில அரசாங்கத்தை எதற்காக போராடினீர்களா


Padmasridharan
ஜூலை 20, 2025 08:05

டீயை குடித்து பார்த்திருக்கிறேன். அதெப்படி சாப்பிடுவார்களென்று சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மொத்தத்துல தனியா நிக்க கெத்து இல்ல கூட்டணியா சாப்பிடப்போறாங்க


புதிய வீடியோ