உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் நடந்த ஐ.டி ரெய்டு: ரூ.4 கோடி பணம் பறிமுதல்

சென்னையில் நடந்த ஐ.டி ரெய்டு: ரூ.4 கோடி பணம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 5 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை (ஐ.டி) சோதனையில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுசெல்லப்படும் பணம், பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர். சென்னையில் சில இடங்களில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர்கள் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்.,2) சென்னையில் 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவரின் வீடு, புரசைவாக்கம் கொண்டித்தோப்பு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களின் வீடுகள் என 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.இதில் தொழில் அதிபர்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொரட்டூரில் மட்டும் ரூ.2.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்பது தெரிய வந்துள்ளது.

நாமக்கல்

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் தனியார் பஸ் உரிமையாளரான சந்திரசேகர் என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் பிரபல அரசியல் கட்சிக்கு நெருக்கமானவர் எனக்கூறப்படும் நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
ஏப் 03, 2024 17:37

இலவசமாக பணம் கொடுத்தோம் என்றுதான் உருட்டுவார்கள் அமலாக்கத்துறையை வைத்து என்ன தொழில் செய்து சம்பாதித்தார்கள் என்பதை வைத்து தக்க தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும்


karthikeyan.p
ஏப் 03, 2024 16:12

சரியான கருத்து


Arul Narayanan
ஏப் 03, 2024 16:11

தண்டனை நீதிமன்றம் கொடுக்க வேண்டுமே இழுத்தடித்து விட்டு ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யும்


Anantharaman Srinivasan
ஏப் 03, 2024 16:07

பலயிடங்களில் நடக்கும் ரெய்டில் மாட்டும் பணங்கள் எந்தகட்சிக்கு சொந்தமானது என்ற தகவல் கடைசிவரை வெளியில் வராது தண்டனையும் கிடையாது அதுக்கும் கோர்ட்டுக்கு போனால்தான் தீர்வா


Palanisamy Sekar
ஏப் 03, 2024 15:55

இப்படி தொழில் அதிபர்களை வைத்து பணப்பட்டுவாடா செய்வதுதான் செந்தில் பாலாஜியின் தந்திரம் அதனை தக்க நேரத்தில் தடுத்துள்ளது வருமானவரித்துறை ஆனாலும் இந்த தொகை ஆயிரத்தில் ஒருபங்கு தான் மிச்சம் உள்ளது நிறைய இந்தப்பணத்தை வைத்துதான் சாதிக்க முடியும் என்று திமுக உறுதியாக நம்புகின்றது திருமங்கலம் பார்முலாவை தொடர்ந்து செய்கின்றது திமுக திமுக கூட்டத்துக்கு போவோருக்கு இருநூறு மட்டும் கொடுத்து அனுப்பிவைத்ததை காணொளியில் பார்த்தோம் undefined அப்படிப்பட்ட ஜனங்களை நம்பியே இந்த தேர்தலில் திமுக பணத்தால் அடிக்க நினைக்கின்றது அந்த திட்டத்தில் திமுக ஜெயிப்போம் என்று மார் தட்டுகின்றது பிடிக்கப்பட்ட இந்த நபர்களை குறைந்தபட்சம் ஐந்தாண்டு சிறை தண்டனையை கொடுத்தால் மட்டுமே பிறருக்கு ஒருவித பயமாவது உண்டாகும் பொறுத்திருந்து பார்ப்போம் தேர்தல் நெருங்க நெருங்க கோடிகளெல்லாம் தாராளமாக புழக்கத்துக்கு வந்துவிடுமே


Anantharaman Srinivasan
ஏப் 03, 2024 16:19

திமுக மட்டும் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறதா மற்ற கட்சிகள் பரம யோக்கியமா கோர்ட் தேர்தல் பத்திரங்களுக்கு ஆர்டர் போட்டது போல் பிடிபட்ட பணமும் எந்தகட்சிக்கு சொந்தமானது என்பதை வெளியிடச்சொன்னால் மற்ற கட்சிகளின் சாயம் வெளுக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை