உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவியை காலி செய்தது வாய்ச்சவடால்; தர்மபுரி தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிப்பு!

பதவியை காலி செய்தது வாய்ச்சவடால்; தர்மபுரி தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிப்பு!

தர்மபுரி: தர்மபுரி கிழக்கு தி.மு.க., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன், ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய மாவட்ட செயலாளராக எம்.பி., மணி நியமிக்கப்பட்டுள்ளார்.தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல் நிலவி வருவது, ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் வரை அனைவரும் அறிந்த உண்மை. மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணி, தனக்கென ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வந்ததாக தலைமை கருதியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2q0ki3op&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியில், நான்கு வெவ்வேறு கோஷ்டிகள் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டு அரசியல் செய்ததால், அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிக்கு பின்னடைவு வரும் நிலை ஏற்பட்டது.இதற்கு தீர்வு காணும் விதமாக, தடங்கம் சுப்பிரமணியை, பிப்.,22ம் தேதி கட்சி தலைமை மாற்றியது. அவருக்கு பதிலாக, பென்னாகரம் தர்மசெல்வன், புதிய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.அவராவது கட்சியை சரியாக வழிநடத்துவார் என்று எண்ணி, தலைமை அவரை நியமனம் செய்திருந்தது. ஆனால், அவர் கட்சியினர் மத்தியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, தலைமைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் இங்கே இருக்க முடியாது என்கிற மிரட்டல் தோரணையில் அவரது பேச்சு இருந்தது.இதை, அவருக்கு ஆகாத கட்சி நிர்வாகிகள், பதிவு செய்து வெளியிட்டனர். இது, ஆளும் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பிப்.,23ம் தேதி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தர்மசெல்வன் இன்று அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.புதிய மாவட்ட பொறுப்பாளராக, தர்மபுரி தொகுதி எம்.பி., மணியை நியமித்து, கட்சி பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kasimani Baskaran
மார் 19, 2025 04:04

இன்னும் சிறிது காலத்துக்கு பிறகு பெரிய பதவி கொடுத்து கெளரவிப்பார்கள்.


Appa V
மார் 18, 2025 22:42

தெலுங்கு பூர்வீகம் யாரும் கிடைக்கவில்லையா


Raj S
மார் 18, 2025 22:42

இதுதான் சரி... மாசம் ஒருத்தன போட்டுட்டா எல்லாருக்கும் பதவி... மக்கள் எப்படி இருந்தாலும் இந்த திருடர்களுக்கு குவார்ட்டரும், பிரியாணியும் வாங்கிட்டு காசுக்குத்தான் ஓட்டு போடுவாங்க...


தாமரை மலர்கிறது
மார் 18, 2025 22:21

தெனாவெட்டு திமிர்பிடித்தவர்களை கட்சி தலைவராக போடுவது தான் திமுக ஸ்டைல்.


MARUTHU PANDIAR
மார் 18, 2025 22:07

அந்த மாடல் கட்சிக்கு இதெல்லாம் புதுசா ? மொத்த சரக்கும் அப்படி தான் . மேற் படி ஆசாமிக்கு மீண்டும் பதவி கொடுக்கப் படும் போது , இயம்ப கொய்யாட்டாக நடந்தாலும் செய்தி போட்டால் தேவலை .


ராமகிருஷ்ணன்
மார் 18, 2025 21:40

வாய்ச்சவடால், வெட்டி வீராப்பு, ஜம்பமான நடத்தை நிறை வேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுதல், பொய், பித்தலாட்டம், நயவஞ்சகம் இவைகளின் மொத்த வடிவம் தான் திமுக. இந்த குணங்கள் இல்லை என்றால் அவன் திமுககாரனே இல்லை.


vns
மார் 18, 2025 20:17

திமுக ஆட்சி, தலைமை, குடும்பம் மற்ற எல்லாம் வாழ்வதே வாய் சவடாலில் இதில் யாரை வெளியே தள்ள முடியும் ? எத்தனை காலமும் ஏமாற்றுபவர்கள் திமுகவினர்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 18, 2025 20:05

இப்போ நடவடிக்கை எடுத்திருக்கிற மாதிரி காட்டி இருப்பது ஊடகங்களுக்கு மட்டும். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசாத பேச்சா?


ஆரூர் ரங்
மார் 18, 2025 19:49

தற்காலிக நாடகம். ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சேர்க்கவில்லையா?


மணி
மார் 18, 2025 19:37

மீண்டும் சேர்க படு வாண் இது நாடகம்


புதிய வீடியோ