உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்குறுதி அளித்து 6 ஆண்டுகளாகிறது; முதல்வருக்கு நினைவுபடுத்திய அரசு டாக்டர்கள்!

வாக்குறுதி அளித்து 6 ஆண்டுகளாகிறது; முதல்வருக்கு நினைவுபடுத்திய அரசு டாக்டர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்து, 'தி.மு.க., ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என, அரசு டாக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்து, நேற்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றதாக, அரசு டாக்டர்கள் புகைப்படம் வெளியிட்டு, முதல்வருக்கு நினைவுபடுத்தினர்.கருணாநிதி முதல்வராக இருந்த போது, அரசு டாக்டர்களுக்கான ஊதிய உயர்வு சம்பந்தமான அரசாணை 354 வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை அதன் பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தவில்லை. இதனால் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் அரசு டாக்டர்கள் ஊதியம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை அமல்படுத்தவும், டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தியும் அரசு டாக்டர்களுக்கான கூட்டமைப்பு சார்பில், 2019 அக்., 25ம் தேதி முதல், சில டாக்டர்கள், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் ஒரு வாரம் வரை நீடித்தது.அப்போது, போராட்டத்தில் சில டாக்டர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி வரை டாக்டர்களின் இந்த போராட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமியோ, சுகாதார துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரோ கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் வரிசை கட்டி மருத்துவமனைக்கு சென்று, டாக்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்த வரிசையில், அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அக்., 28ம் தேதி, கட்சி மூத்த நிர்வாகிகளுடன், ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று, போராட்டம் நடத்திய டாக்டர்களை சந்தித்தார்.அப்போது, 'தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி வெளியிட்ட அரசாணையை அமல்படுத்த தானே நீங்கள் போராடுகிறீர்கள். இந்த ஆட்சியில் அதை நடைமுறைப்படுத்த மாட்டர். அடுத்தது தி.மு.க., ஆட்சி தான் அமையும். அப்போது உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன். நீங்கள் உங்கள் உடல் நலத்தை வருத்திக் கொள்ளாமல், போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.அவர் சொன்ன மாதிரியே, அடுத்த தேர்தலில் தி.மு.க., ஆட்சி அமைந்தது. டாக்டர்களும் அதே கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். ஆட்சி முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையிலும், டாக்டர்களின் அந்த கோரிக்கை மட்டும் நிறைவேறிய பாடில்லை.இந்நிலையில், 'ஸ்டாலின் எங்களை மருத்துவமனையி ல் சந்தித்து நேற்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 'ஆனால், கோரிக்கைகள் தான் நிறைவேற்றப்படவில்லை. அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்' எனக்கூறி, அரசு டாக்டர்கள் சமூக வலைதளங்களில், அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.

நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

N S
அக் 29, 2025 19:12

நன்று. நன்று. அப்பா அன்று கோரிக்கை வைத்தார், "நீங்கள் உங்கள் உடல் நலத்தை வருத்திக் கொள்ளாமல், போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இன்று மருத்துவர்கள் அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். மருத்துவ பயனாளிகளுக்கு திராவிட மாடல் அரசால் மருந்து கிடைக்கலாம். ஆனால் மருத்துவர்களுக்கு பயன் கிடைக்குமா என்பது பூனை மேல் மதில் கதை தான்.


Karunanidhi
அக் 29, 2025 16:39

10‌ வருடம் ஆதிமுக‌ ஆட்சியில் செயல் படுத்த முடியவில்லை. திமுக ஆட்சி வந்ததும் செயல் படுத்துவோம் என்பது உண்மை. விரைவில் அறிவிப்பு வரும்.


Amar Akbar Antony
அக் 29, 2025 14:11

ஐயோ ஐயோ அதெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது அதையெல்லாம் பெரிஸ் பண்ணக்கூடாது. நாங்கள் வயலில் கொண்க்ரீட் போட்டு paying பயிர்களை பார்த்தோம் அல்லவா அதுபோலத்தான் இதுவும். ரொம்பப்பேசனீங்கன்னா அரசு டாக்டர் யார்யாரெல்லாம் தனியாக கிளினிக் நடத்துகிறீர்களோ அதையெல்லாம் மூட சட்டம் இயற்றுவோம். ஜாக்கிரத.


Kumar Kumzi
அக் 29, 2025 13:18

உங்களின் கோரிக்கை அடுத்த ஆட்சியில் நிறைவேறும்


Abdul Rahim
அக் 29, 2025 13:03

போங்க போயி 12 வருஷமா ஒரு மகாநடிகன் 15 லட்ச வாக்குறுதியை நிறைவேத்தாம நடிச்சிட்டு ஏமாத்துறாரு அவர கேளுங்கோ...


Mohan
அக் 29, 2025 18:24

ஹெலோ மூர்க்ஸ் போதும் உங்கள் உருட்டு ...


angbu ganesh
அக் 29, 2025 12:15

டாக்டர்களே இப்படி ஏமாந்தா பாமரன் எப்படி ஏமாற மாட்டான் அய்யா ஸ்டாலின் அவங்க கிட்ட சொல்லுங்க இன்னும் 20 வருஷம் ஆனாலும் அவங்க கோரிக்கை நிறைவேறதுன்னு பாவம் உன்ன நம்பின பாவத்துக்கு நரகம்தான்


ஜெகதீஸ்வரன் தண்டபானி
அக் 29, 2025 11:52

டாக்டர் கொஞ்ச மாதம் பொறுங்க. எதிர் கட்சி ஆனதும் உங்களை வந்து சந்திப்பார். படித்த உங்களையே ஸ்டாலின் ஏமாற்றுகிறார் என்றால் பொது பாமர மக்கள் எம்மாத்திரம்?


Brahamanapalle murthy
அக் 29, 2025 11:07

அது வேற வாய். எதிர் கட்சியாக இருக்கும் போது நாளொரு போராட்டம், பொழுதொரு பேட்டி கொடுத்த கட்சி. இப்போ வாய் மூடி இருக்கு. மக்கள் உஷாராக இருக்க vendum.


Madras Madra
அக் 29, 2025 10:47

எவ்வளவு நெஞ்சழுத்தம் இந்த மருத்துவர்களுக்கு வாக்குறுதியை எல்லாம் உண்மை என்று நம்பியது மட்டுமில்லாமல் நினைவு வேறு படுத்துகின்றனர் தேர்தல் வாக்குறுதியையே நிறைவேற்ற மாட்டோம் இதில் எதிர் கட்சியாய் இருக்கும் பொது ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்தால் அதை வைத்து இப்படி அரசியல் செய்வதா கலி முற்றி விட்டது


Sesh
அக் 29, 2025 10:43

வாய்ப்பில்லை டாக்டர்களே, தற்போதைய விடியல் அரசிற்கு செலெக்ட்டிவ் அம்னிஷியா உள்ளது, உங்களின் அடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை