உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பு பெற்றால் மட்டும் போதாது; களத்தில் வேலை பார்க்கணும்: சொல்கிறார் உதயநிதி

பொறுப்பு பெற்றால் மட்டும் போதாது; களத்தில் வேலை பார்க்கணும்: சொல்கிறார் உதயநிதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “திமுக இளைஞரணியில், ஐந்து லட்சம் நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஹிந்தி புகுந்து விடும். அதனால், 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் இலக்கை நிறைவேற்ற வேண்டும்,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், உதயநிதி பேசியதாவது: தமிழகம் முழுதும் நகர, பேரூர் வார்டுகள், ஊராட்சி கிளைகள்தோறும் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம்.இப்படி நியமித்தால், இளைஞரணி நிர்வாகிகள் மட்டுமே, ஐந்து லட்சம் பேர் வருவர். இந்தியாவிலேயே அசைக்க முடியாத ஓர் அமைப்பாக, திமுக இளைஞரணி இருக்கப்போகிறது.ஒரு கட்சியில் இளைஞரணி என்ற தனி அமைப்பை, இந்தியாவிலேயே முதலில் ஆரம்பித்தவர் கருணாநிதி. அவரால் உருவாக்கப்பட்ட எத்தனையோ அணிகள், கட்சியில் இருந்தாலும், முதன்மை அணியாக இருப்பது இளைஞரணி.இந்தியாவில் பல கட்சிகள், பூத் கமிட்டி அமைக்க சிரமப்படுகிற நேரத்தில், ஓட்டுச்சாவடிக்கு ஒரு இளைஞரணி அமைப்பாளரை நியமித்து இருக்கிறோம் என்றால், அது நம் சாதனை.பொறுப்பு வாங்கி விட்டோம்; வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டோம்; நான்கு பிளக்ஸ் பேனர் வைத்து விட்டோம்; விளம்பரம் கொடுத்து விட்டோம் என, இருக்கக் கூடாது. அனைவரும் களத்தில் இறங்கி, வேலை பார்க்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.'ஓரணியில் தமிழகம்' வாயிலாக, இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இதைப் பார்த்து, அதிமுகவுக்கும், பாஜவுக்கும் பயம் வந்துவிட்டது. பழனிசாமி எங்கு சென்றாலும், ஓரணியில் தமிழகம் பற்றி தான் பேசுகிறார். பதற்றத்தில் தான் அவர் அப்படி பேசுகிறார்.அதிமுக- பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மீண்டும் ஹிந்தி புகுத்தப்படும்; தொகுதி மறுவரையறை வரும்; புதியக் கல்வி கொள்கை வரும். எனவே, பாஜ- அதிமுகவை வீழ்த்தும் போரில், நம் இளைஞர் அணி முன்வரிசையில் நிற்க வேண்டும்.வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேலாக, திமுக வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

JaiRam
ஆக 20, 2025 16:17

உ பி இஸ் உங்களுக்கு எச்சரிக்கை 200 வாங்கினால் மட்டும் போதாது தினமும் போனும் கையுமாய் அணைத்து இடங்களிலும் தலைவரு குடும்பத்தை புகழ்ந்து ஆடியோ வீடியோ என பதிவேற்றிக்கொண்டே இருக்க வேண்டும் குறிப்பாக நயனை பாராடடுவதை நிறுத்தக்கூடாது டாஸ்மார்க் பக்கம் போகாமல் இருக்க கூடாது


Barakat Ali
ஆக 20, 2025 14:45

[களத்தில் இறங்கி, வேலை பார்க்க வேண்டும்] ... என்ன வேலை ???? செங்கல்லைத் தூக்கிட்டு திரியிறதா ????


மோகன்
ஆக 20, 2025 14:15

இன்னுமா தூக்கத்துல இருந்து எந்திருக்கல?....


MARAN
ஆக 20, 2025 14:03

neengal என்ன பணி செய்து இந்த இடத்திற்கு வந்தீர்கள்


ram
ஆக 20, 2025 14:00

ஆமாம் களத்தில் வேலை பார்க்கணும் எப்படி சினிமா கூத்தாடிக்கு ரேஸ் வைத்து ஐம்பது கோடி மக்கள் பணத்தை ஸ்வாகா பண்ண மாதிரி. அது சரி இந்த ஆளு எந்த களத்தில் வேலை செய்து துணை முதலமைச்சர் ஆனார் என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.


SUBRAMANIAN P
ஆக 20, 2025 13:52

களத்தில் உங்களைவிட அறிவுப்பூர்வமாக,சுறுசுறுப்பாக வேலை பார்க்க உங்கள் கட்சியிலேயே நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் துணை முதல்வர் பதவியை கொடுத்துதான் பாருங்களேன். ஹி..ஹி..


Vasan
ஆக 20, 2025 13:06

Was he talking to himself ?


Ramesh Sargam
ஆக 20, 2025 12:36

இப்பவே களத்தில் உங்கள் கழக கண்மணிகள் நன்றாகத்தானே லஞ்சம் வாங்கும் பணியை திறம்பட செய்கிறார்கள்.


திகழ்ஓவியன்
ஆக 20, 2025 12:24

கவலை வேண்டாம் அந்த ஆண்டவனே வந்தாலும், மகளிர் உரிமை தொகை 1000, தவப்புதல்வன் 1000, மாணவிக்கு படிக்கச் 1000, முதியோர் உதவி தொகை 1500, ராணுவ வீரர்க்கு 20000, எல்லா பெண்களும் உரிமையோடு பஸ் இல் சென்றுவர இலவச AC பஸ் , அர்ச்சகருக்கு மாதம் 3000 இப்படி எல்லா தரப்பு மக்களுக்கும் நிதி சென்று அடையும்போது மக்களுக்கு என்ன கவலை , இன்று கூட ஒரு பத்திரிகையில் தமிழ் நாட்டில் ஒரு குடும்பத்திற்கு வருத்தத்திற்கு 45000 சென்று அடைகிறது என்று விரிவாக விளக்கி யுள்ளது


vivek
ஆக 20, 2025 13:30

அது கடைசியில் மடை மாறி டாஸ்மாக் போகிறது...இதை சொல்லவில்லையே


திகழ்ஓவியன்
ஆக 20, 2025 14:17

டாஸ்மாக் அது குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்துவே குடிக்கும் குடிகாரன் கவலை, உண்மையான குடும்பம் அதாவது குடும்பம் உள்ளவன் குடி பற்றி பேசமாட்டான், மோடி போட்டுள்ள வரியில் குடி குடும்பஸ்தனுக்கு வாராது


vivek
ஆக 20, 2025 16:09

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அதிக வளர்ச்சி...உன் குடும்பம் அதற்கு காரணமா


M Ramachandran
ஆக 20, 2025 11:56

கட்சிக்குள்ள குண நலன்ங்களுடன் சுற்றி வரவேண்டும்.மக்கள் தெருவில் நடமாட யோசிக்க வேண்டும். வெளியில் சொந்த காரியங்க்ளுக்கோற் அலுவல் வேலையைக்கு செல்ல விடியல் கட்சியின் கொடி பிடித்து நடக்க வேண்டும். இல்லையென்றால் டெங்கு மலேரியா கொசுவை நசுக்குவதைபோல் நசுக்க வேண்டும்.


சமீபத்திய செய்தி