உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சும்மா இருப்பது ரொம்ப கடினம்; சென்னை திரும்பிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓபன் டாக்

சும்மா இருப்பது ரொம்ப கடினம்; சென்னை திரும்பிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓபன் டாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம்' என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின் சென்னை திரும்பினார் அஸ்வின். அவரை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பேர் வருவீர்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை. நான் வந்து அப்படியே வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னை வரவேற்க வந்த அனைவருக்கும் நன்றி. 3வது டெஸ்ட்டின் 4ம் நாளில் ஓய்வு முடிவை எடுத்தேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mzimo9nz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

எனது பயணம்

அடுத்து ஏதும் திட்டமில்லை. அடுத்த பயணத்தை இனிமேல் தான் துவங்க வேண்டும். இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முடிந்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன். சி.எஸ்.கே., அணிக்காக என்னால் முடிந்த வரை விளையாடுவேன். எனக்கு துளியும் கூட வருத்தமே இல்லை. இவ்வாறு அஸ்வின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Natarajan V
டிச 20, 2024 07:12

என்றைக்கும் தமிழன் ஒரு மானஸ்தன் என்பதை நிருபித்துவிட்டார். வாழ்த்துக்கள்.


Ramesh Sargam
டிச 19, 2024 19:31

சும்மா இருப்பது தான் மிகவும் கஷ்டமான விஷயம். ஆம், இதையேதான் சிரிப்பு நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்வார். அது ஜோக்காக இருந்தாலும், சும்மா இருப்பதென்பது மிகவும் கடினம்.


Ramesh Sargam
டிச 19, 2024 19:29

அஸ்வினின் இந்த திடீர் முடிவுக்கு ரோஹித் ஷர்மாதான் காரணம் என்று ஒரு செய்தி பரவலாக வருகிறது. இந்த வடஇந்திய பசங்களுக்கே, தென் இந்திய சாதனையாளர்களை பிடிக்காது. கடந்த சில போட்டிகளில் ரோஹித் முற்றிலும் failure. அவன்தான் முதலில் விளையாட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, அஸ்வினுக்கு ஏதோ அழுத்தம் கொடுத்து, அஸ்வினை கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற செய்ய வைத்திருக்கிறார்.


Narayanan Ganesan
டிச 19, 2024 17:47

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான முடிவு. இப்பொழுது கிரிக்கெட் 20 ஓவருக்குள் சுருங்கி விட்டது. நமது அணி உறுப்பினர்கள் அதற்கென தயாராகி விட்டனர். இனி 5 நாள் போட்டி விளையாடுவது மிக கடினம்.


SWAMINATHAN J
டிச 19, 2024 16:19

It is not a wise decision since our Indian Cricket team requires his services. There is no such bowler matching his caliber. He might have stayed for some more years as long as he is fit


Ramanujadasan
டிச 19, 2024 15:30

அய்யயோ, அஸ்வின் நமது தமிழக 40 எம்பிக்களை கிண்டல் செ ய்கிறார் என நினைத்து விட போகிறார்கள் . அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பு


R Gopalan
டிச 19, 2024 17:45

They are used to for 10years and as HM said another further more 15 years without work only canteen Masala vada.. difficult.. hope Ashwin starts a chain of academy and a successful entrepreneur..


vujai
டிச 19, 2024 13:06

வீட்ட பாத்துங்க


pln
டிச 19, 2024 12:43

வெங்கட்ராகவன், 1975 மற்றும் 1979 ஒன் டே வேர்ல்ட் கப் இந்தியா அணியின் கேப்டனாக செயல்பட்டார். அவருக்கு பிறகு ஸ்ரீகாந்த் இந்தியா அணியை கேப்டனாக வழி நடத்தி உள்ளார். அஸ்வினுக்கு குறைந்த பட்சம் வைஸ் கேப்டன் பதவியாவது கொடுத்திருக்கலாம்.


வால்டர்
டிச 19, 2024 15:48

கேப்டன் பதவியே கொடுத்திருக்கலாம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது


Narayanan Ganesan
டிச 19, 2024 11:42

ஆல் விழுதுகள் போல் நிறைய இளைஞர்களை தயார் செய்யலாம்


sundarsvpr
டிச 19, 2024 11:33

சும்மா இருப்பது என்பது மௌனம் தான். விளையாடாமல் இருக்கக்கூடாது. தவ நிலை என்பது கோடியில் ஒருவருக்கு வருமா என்பது சந்தேகம். மௌனம் என்பது தாயின் கருவில் இருந்த பத்துமாதம். காரணம் ஆண்டவன் மட்டும்தான் துணை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை