உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்த்ததெல்லாம் போதும்யா... போன்லயே பேசி முடிங்கய்யா!

பார்த்ததெல்லாம் போதும்யா... போன்லயே பேசி முடிங்கய்யா!

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப் பங்களை, மொபைல் போன் வாயிலாகவே சரிபார்த்து அனுப்ப, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 1.20 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட்ட இத்திட்டம், வரும் 15ம் தேதியுடன், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை பெறுவதற்கு, மாநிலம் முழுதும் உள்ள மகளிர் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், இதற்கென தனி, 'கவுன்டர்'கள் அமைக்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை, 12 லட்சம் மனுக்கள் வரை பெறப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தல், 2026 ஏப்ரலில் நடைபெற உள்ளதால், விண்ணப்பிக்கும் மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட மனுக்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சரிபார்ப்பு பணிக்கு வழங்கப்பட்டு உள்ளன. மனுக்களை சரிபார்த்து விரைந்து வழங்கும்படி, வருவாய் துறை செயலர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், பல கிராமங்களில் மனுக்கள் சரிபார்ப்பு பணிகள் இன்னும் முடியவில்லை. உரிமைத்தொகை திட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. அதற்குள், புதிய பயனாளிகள் குறித்த அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, காலம் தாழ்த்தாமல், மொபைல் போன் வாயிலாக, பயனாளிகளை தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்து அனுப்ப, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொபைல் போன் வாயிலாக விண்ணப்பங்களை சரிபார்த்து அனுப்பும் பணிகளில், கிராம நிர்வாக அலுவலர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

visu
செப் 09, 2025 16:10

மக்களே இப்படி இலவசத்துக்கு அலைந்தால் நாளைக்கு அதை நீங்கள்தான் கொடுக்க வேண்டும் வரி உயர்வு என்ற பெயரில் .இலவசம் கொடுக்கலாம் யாருக்கு உண்மையிலேயே வசதியில்லையோ அவர்களுக்கு இப்ப எல்லோருக்கும் கிடைக்கும் என்றால் அது ஒட்டு வாங்க கொடுப்பது அதிக பட்சம் ஒரு 5 மாதம் வாங்கலாம் அப்புறம் கொடுக்க அரசிடம் பணம் இருக்காது


Venkateswaran Rajaram
செப் 09, 2025 10:25

ஓட்டு வாங்குவதற்கு மக்கள் வரிப்பணத்தில் அதிகாரபூர்வமாக மக்களுக்கு லஞ்சம் கொடுப்பது ...


V Venkatachalam
செப் 09, 2025 08:51

பாரு பாரு நல்லா பாரு. பயாஸ்கோப் படத்தை பாரு.


Kalyanaraman
செப் 09, 2025 08:50

அடிச்சு விடு.. அடிச்சு விடு.. திமுக ஆட்சியை விட்டு விலகும் போது கஜானாவை முழுமையாக காலி பண்ணிட்டு தான் விலகும். இதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது.


R SRINIVASAN
செப் 09, 2025 08:47

இம்மாதிரி மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ், தீபாவளி இனாம் என்று கொடுப்பதற்கு பதிலாக 1.2 கோடி மகளிர்க்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் ஸ்டாலின் நிரந்தர முதல்வராக தொடரலாம். இது ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் பிஜேபி ,EPS போன்றவர்களும் செய்வதாக வாக்குறுதி கொடுத்தால் அவர்களும் தேர்தலில் ஜெயித்து ஆட்சியை பிடிக்கலாம்.


Sivaram
செப் 09, 2025 08:37

எப்பொழுது உன்னை கை ஏந்த வைத்தார்களோ அன்று முதல் நீ ஒரு மரமண்டை தமிழா


GMM
செப் 09, 2025 08:34

தமிழகத்தில் உள்ள 1.20 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய். தேர்தல் நெருங்குவதால், 12 லட்சம் மனுக்கள் உரிமைத்தொகை பெற தகுதி பெறும்? நன்கொடை பெற்று உரிமை தொகை தரலாம். கருவூல பண financial code விதிப்படி மட்டும் தான் எடுக்க முடியும். இதனை அரசியல் சாசன பாதுகாவலர் பொருட்படுத்த மாட்டார். தேர்தல் ஆணையம் அரசாணை மூலம் இலவச பணம் வாக்கிற்கு லஞ்சம் என தீர்மானித்தால், ஓட்டளிக்க முடியாது.


தமிழ் மைந்தன்
செப் 09, 2025 09:28

மறுமகன் கணக்கிற்கே செல்லும் போது பொதுமக்கள் கணக்கிற்கு செல்வது தப்பா சார்?


VENKATASUBRAMANIAN
செப் 09, 2025 08:12

தேர்தல் வரை எல்லாம் நடக்கும்


xyzabc
செப் 09, 2025 07:55

பார்த்தாலும் சரி. போன் ல பேசினாலும் சரி கொடுக்கற தொகையை கொடுத்தே ஆகணும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 09, 2025 07:19

அது எப்படிங்கையா மகளிரை நேரில் பார்க்காமல் செலக்ட் செய்வது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை