உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெ. வீட்டுக்கு எதிரில் புதிய பங்களா போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா

ஜெ. வீட்டுக்கு எதிரில் புதிய பங்களா போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா

சென்னை,:சென்னை போயஸ் கார்டனில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எதிரே, புதிதாக கட்டப்பட்ட பங்களாவில் சசிகலா நேற்று குடியேறினார்.முதல்வராகவும், அ.தி.மு.க., பொதுச்செயலராகவும் இருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லத்தில் வசித்து வந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த இல்லத்தில் ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா வசித்து வந்தார்.கடந்த 2016ல், ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், வேதா இல்லத்திலேயே சசிகலா இருந்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பின், காட்சிகள் மாறின.சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட பழனிசாமி கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., சென்றது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதா இல்ல பங்களா, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் வசமானது.இந்நிலையில், போயஸ் கார்டன் பகுதியிலேயே வசிக்க விரும்பிய சசிகலா, தன் பெயருக்கு வேதா இல்லம் எதிரே ஏற்கனவே வாங்கி வைத்திருந்த காலி இடத்தில், தனக்கு தனி வீடு கட்டத் துவங்கினார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, போலீசாரின் வாகனங்கள் நிறுத்த, இந்த இடம் பயன்படுத்தப்பட்டது.மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், புதிய பஙகளாவின் கிரகப்பிரவேசம் நடந்தது. சசிகலா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். கிரகப்பிரவேசத்திற்கு முன்பாக, வேதா இல்லத்தின் வாயிலில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜைகள் செய்து, சசிகலா வழிபட்டார்; புதிய பங்களாவில் கோ பூஜையும் நடத்தினார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதா வீடு எதிரே புதிய பங்களாவில் இருந்து, அதற்கான பணிகளை மேற்கொள்வார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Hari
ஜன 29, 2024 16:13

என்னதான் நீங்க வீடு காட்டினாலும் கோபாலபுரம் வீடு மாதரி தெரியலியே ( அத்தனையும் கொள்ளைப்பணம் )


J.V. Iyer
ஜன 29, 2024 06:42

இவர்கள் ஊழல் செய்து சேர்த்த பணத்தை சட்டம் பிடுங்கவில்லையா? யம்மாடி


நல்லவன்
ஜன 27, 2024 11:21

இரெண்டு இலையையும் அந்த பூவோடு சேர்த்துடுங்க, இல்லன்னா கொலை கேஸ்ல உள்ள போயிடுவீங்க...


jayvee
ஜன 26, 2024 09:53

விடாது கருப்பு.. MGR உத்தரவில் நடராஜனால், ஜெயலலிதாவை கண்காணிக்க அவருக்க உதவதுபோல நியமிக்கப்பட்ட சசிகலா தனது முன்னாள் உறவினர் கருணாநிதிக்காகத்தான் அதிக விசுவாசமாக இருந்தார். ஜெயலலிதாவை அழித்து ஒழிக்க அவர் செய்த அதனை காரியங்களும் சரியாக செயல்படமால் போனதிற்கு காரணம் சில நல்ல உள்ளங்கள் படைத்த IPS மற்றும் IAS அதிகாரிகள், திரு மோடி மற்றும் சோ .. இல்லயென்றால் 95 உடன் ஜெயாவின் கதை முடிந்ர்த்திருக்கும்


Indhuindian
ஜன 26, 2024 05:28

புலிய பாத்து பூனை சூடு போட்டுக்கிச்சாம். அது சரி போயஸ் கார்ட்னலே அவ்வளவு பெரிய வூட்டை கட்ட என்ன வ்யாவரம் தோஷில் பண்ணாருன்னு வருமான வரி அதிகாரிங்க கேக்க மாட்டாங்களா


Gurumurthy Kalyanaraman
ஜன 25, 2024 13:11

சார், ஈ.டி. கண்ணுலே இது படலீங்ளா?


Thiruvenkadam
ஜன 27, 2024 17:08

அது எப்படி படும்? தன் எஜமானனுக்கு வேண்டாத ஆட்களை மட்டுமே குறி வைத்து சோதனை செய்ய போவானுங்க......ஆட்சி மாறினால் மேலே உள்ளவனுங்க உள்ளே போகவேண்டிய நேரம் வரும்.


ரமேஷ்VPT
ஜன 25, 2024 01:51

புதிய வீடு கட்டுவதில் தப்பில்லை எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கும். ஆனால் கேஸ்சட் கடை நடத்தி வந்த இந்த குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய சொத்து வாங்க பணம் எங்கிருந்து வந்தது, இவ்வளவுக்கும் இவங்க ஒன்னும் பெரிய தொழிற்சாலை நடத்தி சாம்பாதிக்கவில்லை. என்ன எழவோ நமது மக்களும் திருந்த மாட்டார்கள் போல.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை