உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதை பொருள் கடத்தல்: சென்னை கொண்டு வரப்பட்டார் ஜாபர்சாதிக்

போதை பொருள் கடத்தல்: சென்னை கொண்டு வரப்பட்டார் ஜாபர்சாதிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் டில்லியில் இருந்து இன்று (மார்ச் 18) சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இவரை இன்று முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்துகின்றனர். சென்னையை சேர்ந்த, தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான, ஜாபர் சாதிக், 35, டில்லியில் மார்ச் 9ல் கைது செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1yr4tvcg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏழு நாள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.ஜாபர்சாதிக் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் யார், தன்னுடன் தொடர்பில் இருந்த வி.ஐ.பி.,க்கள், அவர்களுக்கு தரப்பட்ட பணம் என, அனைத்து விபரங்களையும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.அவரை நேற்று முன்தினம், பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணையின் போது அதிகாரிகள் தன்னை துன்புறுத்தவில்லை என்றும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு மேலும் மூன்று நாட்கள் காவல் விசாரணை நீடிக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிடம் இருந்து ஏழு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதிலுள்ள, தகவல்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது. சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின், ஜாபர் சாதிக் திஹார் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 05:38

போலீசார் கொடுக்கிற அடியில் உண்மையை கக்கிவிட வேண்டும்.


R Kay
மார் 19, 2024 00:33

அடுத்தவன் குடியை கெடுத்து தாங்கள் மட்டும் உல்லாச வாழ்க்கை வாழ நினைப்பவர்களை என்னவென்று சொல்ல?


Rajagopal
மார் 18, 2024 20:36

இவன் உண்மையிலேயே போதைப்பொருள் வியாபாரம் செய்யும் கும்பலின் தலைவனா, இல்லை இவனை வைத்து பெரிய முதலைகள் தங்கள் மீது எந்த நிழலும் விழாமல் பார்த்துக் கொள்கிறார்களா? இந்தியாவை சீர்குலைக்க பல வழிகள் கையாளப்படுகின்றன. முன்னேறியுள்ள, அல்லது முன்னேறி வரும் மாநிலங்களில் போதைப்பொருளை நுழைத்து, இளைஞர்களை சீரழித்து, எதிர்காலத்திற்கு உலை வைக்க சில நாடுகள் முயன்று வருகின்றன. இதில் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் அடக்கம். இது மறைமுகமான போர். இதன் மூலமாக மெதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் அழித்து விடலாம். இதில் அமெரிக்காவும் பங்கு எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இஸ்லாமிய இயக்கங்கள், மிஷனரி இயக்கங்கள், கம்யூனிஸ்டுகள், இந்திய குடிமக்களாக இருந்தும் அதன் எதிரிகளாகவும், எதிரிகளுக்காகவும் செயல்படுபவர்கள், பாஜக அரசை எதுவும் செய்ய விடாமல் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் ஊழல் நிரம்பிய பல எதிர்க்கட்சிகள் இந்த போதைப்பொருள் வியாபாரத்துக்கு வழி செய்துகொடுத்து விட்டு எல்லாம் சரிந்து விழ காத்திருக்கின்றன. அதனால் ஜாபர் சாதிக் உண்மையிலேயே அத்தனை பலம் வாய்ந்த சர்வதேச கும்பலின் தலைவனா, இல்லை நான் சொல்லிய பல இயக்கங்களின் சார்பாக வேலை செய்யும் கைப்பொம்மையா?


Godfather_Senior
மார் 18, 2024 18:57

எல்லாத்தையும் சட்டு புட்டுன்னு எலக்ஷனுக்கு முன்னாடியே சொல்லிடய்யா மத்தவங்களை கம்பி எண்ண அனுப்பலேன்னா உன்னையும் ஒரு சாதிக் பாஷாவா ஆக்கிப்புடுவானுங்க உன்னாலே திமுக தோத்தா அது ஜனங்களுக்குத்தான் லாபம்


வெகுளி
மார் 18, 2024 17:38

ம்ம்ம்... என்ன இலாக்கா குடுக்கலாம்?.....


வெகுளி
மார் 18, 2024 17:36

ஸ்பெக்ட்ரம் ராசா, திகார் ராணிக்கு போஸ்டரெல்லாம் ஒட்டி தடபுடலாக வரவேற்றது போல இந்த பாய்க்கு செய்யலையா?....


Suresh
மார் 18, 2024 17:26

கொத்தடிமைகளும், அதிபரின் அடிவருடிகளும் காணோம். யாராவது பாத்தீங்களா?


Palanisamy Sekar
மார் 18, 2024 16:25

சாதிக்குடன் இங்கே தமிழகத்தில் சில சினிமாக்காரர்கள் கூடவே இருந்து தொழில் பார்ட்னராக இருந்து, பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். இப்படி இருந்தால் எப்படி தமிழகத்தில் பாஜகவினர் உற்சாகமாக இருப்பார்கள்? சம்பந்தப்பட்ட அணைத்து போரையும் கைது செய்யாமல் தேமேன்னு இருப்பது பல பாஜகவினருக்கு ஒருவித மனசோர்வே வந்துவிடுகின்றது. இதே காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் அவர்கள் பலரையும் கைது செய்து போதை கடத்தலில் சம்பந்தம் இருக்கு என்று காரணத்தை சொல்லி இருப்பார்கள்.


Duruvesan
மார் 18, 2024 16:23

மார்க்கத்தில் போதை ஹராம், இங்க ஒரு அல்லக்கை


Rajarajan
மார் 18, 2024 16:04

அதுசரி, இதுவே மைலாப்பூர் தயிர்சாத மாமா சின்னதா ஒரு துளசியை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தா, திராவிட ஆட்சியாளர்கள் நிகழ்ச்சி நடத்தியிருக்கும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி