| ADDED : மார் 05, 2024 11:38 PM
சென்னை:போதைப்பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கின் தம்பி சலீம், வி.சி.., கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.தி.மு.க., அயலக அணி நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் தேடப்படுகிறார்.இந்த விவகாரத்தில், ஜாபர் சாதிக்கின் தம்பியும், வி.சி., கட்சி நிர்வாகியுமான சலீமுக்கும் தொடர்பிருப்பதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கும், சலீமும் தலைமறைவாக உள்ளனர்.இந்த வழக்குக்கு பின், தி.மு.க.,வில் இருந்து, ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, மத்திய சென்னை மண்டல துணை தலைவராக இருக்கும் முகமது சலீமையும், கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக, வி.சி., ஒழுங்கு நடவடிக்கைக் குழு செயலர் தேவராஜ் அறிவித்துள்ளார்.