உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் ஜாமின் மனு: வேறு நீதிபதிக்கு மாற்றம்

ஜாபர் சாதிக் ஜாமின் மனு: வேறு நீதிபதிக்கு மாற்றம்

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரின் ஜாமின் மனுவை, வேறு நீதிபதியின் விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தினார்.போதைப்பொருள் கடத்தல் வழக்கில், சினிமா தயாரிப்பாளரும், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். பின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழும், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, ஜாபர் சாதிக்கை கைது செய்தது. அவரது சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார். இவர்களின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து, ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த மனுக்களை, வேறு நீதிபதியின் விசாரணைக்கு பட்டியலிடும்படி, பதிவுத்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.இதற்கிடையில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ''இருவரது ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து, கடந்த 19ல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு முன்பே, ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
டிச 22, 2024 09:55

அவரும் பயந்து விலகினால் ????


Barakat Ali
டிச 22, 2024 09:19

நீதிபதிகள் இப்படி வசதியாக விலகிக்கொள்வதைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் இல்லையா ???? விபரம் தெரிந்தவர்கள் விளக்க வேண்டுகிறேன் ....


நிக்கோல்தாம்சன்
டிச 22, 2024 07:22

திருடர்களுக்கு முன்னேற்ற பாதையில் செல்ல ஒரு கழகம் என்று இருந்தால் அதன் பெயர் என்னவாக இருக்கும் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை