உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாக்டோ- ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (மார்ச் 23) மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, ஜாக்டோ - ஜியோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் டாடாபாத் சிவானந்தா காலனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.திருநெல்வேலி, சேலம், திருச்சி,நாமக்கல், மதுரை, தஞ்சாவூரிலும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: பட்ஜெட் அறிவிப்பில், எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். உயர்பநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

aaruthirumalai
மார் 23, 2025 20:25

கொசு மருந்த எடுத்து அடிச்சி கொள்ளுங்க


நரேந்திர பாரதி
மார் 23, 2025 16:27

அது எப்படி இவனுங்க எல்லா தடவையும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் தூக்கத்திலே இருந்து எந்திரிக்கிறானுங்க?? எலும்பு துண்டை வீசினால், மீண்டும் ஆட்சியிலே உட்கார வைப்பார்கள்


ரவி
மார் 23, 2025 16:23

இது என்ன மக்களுக்கான போராட்டமா ?


Kumar Kumzi
மார் 23, 2025 14:50

திருட்டு திராவிஷ நாடக கம்பெனியின் நடிகர்களுடைய சங்கம் தான் இந்த ஜாக்ட்டோ ஜியோ


J.Isaac
மார் 23, 2025 14:50

கட்டாய விடுப்பில் அனைவரையும் அனுப்பிவிட்டு, புதிதாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஏனென்றால் கோடிக்கணக்கான பேர் வேலைக்கு காத்திருக்கின்றனர்.


S.L.Narasimman
மார் 23, 2025 14:44

போராட்டம் வீண். உங்களுக்கு போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய அவரவர் ஏரியா எம்எல்ஏகளை உலுக்கினால் நிறைவேற போகுது.


எவர்கிங்
மார் 23, 2025 13:31

இந்த ஜாக்கெட்டோ ஜெட்டியோ அமைப்பு தடை செய்யப்பட வேண்டிய பநாசகாரகும்பல்


GMM
மார் 23, 2025 13:25

வாக்கை, வென்ற உறுப்பினரை, கட்சியை விலைக்கு வாங்கும் திராவிட இயக்கம். உங்கள் ஓட்டு எதற்கு? உண்ணா விரதம் வீண். பெரிய எதிர்க்கட்சி உருவானால் தான் திராவிட கட்சியை தோற்கடிக்க முடியும். அரசியலுக்கு உதவிய உங்கள் நிதி மேலாண்மையால் தமிழகம் திவால் .சம்பளம் பென்ஷன் கட் சூழல் உருவாகும்.


MUTHU
மார் 23, 2025 13:21

பழைய ஓய்வூதிய திட்டம் பிரமிட் உள்ளே இருக்கும் மம்மி போன்றது. இவர்களை ஏமாற்றி வோட்டு வாங்க மட்டுமே பயன்படும். திரும்பவும் உயிர் வராது.


Nellai tamilan
மார் 23, 2025 13:16

கிராமங்களில் வேலை பார்க்கும் மூன்றாம் வகுப்பு அரசு ஆசிரியர்களின் சம்பளம் லட்சங்களில் உள்ளது. பாதி ஆசிரியர்கள் வட்டிக்கு வெளியில் குடுத்து வரவுசெலவு நடத்துகிறார்கள். வருடத்தில் அனைத்து சனி ஞாயிறும் விடுமுறை, கோடை காலத்தில் ஏப்ரல் மே பள்ளி விடுமுறை என்று பாதி நாளும் விடுமுறை தான். உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் தயவு செய்து ராஜினாமா செய்யுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை