உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாக்டோ - ஜியோ மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது

ஜாக்டோ - ஜியோ மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும், 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். சென்னையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர்.

30 அம்ச கோரிக்கைகள்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சரண்டர் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, தி.மு.க., அரசை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுதும் ஜாக்டோ ஜியோ சார்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில், டி.பி. ஐ., வளாகம் முன் நடந்த போராட்டத்தில், கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாயவன், அன்பரசு, வெங்கடேசன், உதயகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தி.மு.க., அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

வாகன நெரிசல்

போராட்டத்தால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, டி.பி.ஐ., வளாக வாயில் கதவுகள் பூட்டப்பட்டு, நேற்று மாலை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.போராட்டத்தால் கல்லுாரி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, பலர் கைதாக வராமல், சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி, பஸ்சில் ஏற்றி சமூக நலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர். மதுரை, திருநெல்வேலி, திருச்சி, காஞ்சிபுரம், தென்காசி, தஞ்சாவூர், நாகை என, அனைத்து மாவட்டங்களிலும், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

பிப்., 26 முதல் வேலை நிறுத்தம்

மதுரையில், ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் அளித்த பேட்டி:முந்தைய ஆட்சியில் போராடிய போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார். அவர் முதல்வரான பின், ஆறு முறை சந்தித்தும், நிதிநிலை சரியானதும் நிறைவேற்றுவோம் என்றார்.அந்த நம்பிக்கையுடன் 30 மாதங்களாக காத்திருந்தும், கோரிக்கை நிறைவேறவில்லை. வரும் நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், பிப்., 10ல் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பிப்.,15ல் ஒரு நாள் வேலை நிறுத்தமும், பிப்., 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Krismoo
ஜன 31, 2024 16:45

இவர்கள் தி மு க வுக்கு ஒட்டு போடாமல் இருந்தாலும் மற்றவர்கள் போடும் கள்ள ஓட்டுக்கு இவர்கள் நன்றாக பூத்தில் வேலை செய்வார்கள். அதனால் தி மு க என்றாலே ஆசிரியர்களுக்கு குஷி தான். நாளை முதல் சரக்கு விலை உயர்வு. தேர்தலுக்கு முன் இவர்களுக்கு கோரிக்கை எல்லாம் நிறைவேற்றப்படும். குத்துங்கடா ஓட்டை தி மு காவுக்கு நாட்டை நாசமாக்க.


g.s,rajan
ஜன 31, 2024 16:21

நம்பிக் ஓட்டு போட்டாங்க ,நாசமாப் போயிட்டாங்க ....


duruvasar
ஜன 31, 2024 14:28

விவசாயிகளையே குண்டர் சட்டத்தில் தூக்கிய ட்ராவிடமாடல் அரசு. பார்த்து சுதானமாக நடத்துக்குங்க.


ஆரூர் ரங்
ஜன 31, 2024 12:23

திமுக வுக்கு பிரச்சாரம் செய்து பூத் மோசடிகளிலும் உதவிய யார் ஏமாற்றப்பட்டாலும் மகிழ்ச்சியே????. கேடு செய்த கூட்டத்தின் திண்டாட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.


கலிவரதன்,திருச்சி
ஜன 31, 2024 10:26

இவ்வளவு தூரத்திற்கு ஏமாற்றப்பட்டும் வேதனையை அனுபவித்து வரும் இந்த ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் இதற்கு மேலும் திமுகவுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்றால் இவர்களைப் போன்ற மானம் கெட்டவர்கள் யாருமே இந்த உலகில் இருக்க முடியாது.


ராமகிருஷ்ணன்
ஜன 31, 2024 09:43

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு உதவிகள் செய்ததால் அதற்கான கூலியை கேட்கிறார்கள். மக்கள் படும் துன்பத்தை பார்த்தால் இந்த கேடுகெட்ட ஆட்சியை கொண்டு வந்த குற்றத்திற்காக தண்டனை தரனும்


Ramesh
ஜன 31, 2024 09:40

அன்று அரசு ஊழியர்களின் ஓட்டுக்காக கருணாநிதி நடத்திய சம்பள உயர்வு நாடகத்தின் வெளிப்பாடு இப்பொழுது பிரதிபலிக்கின்றது


veeramani
ஜன 31, 2024 09:31

தமிழக அனைத்து ஆசிரியர்களும் அரசாங்க ஊழியர் என கேஜெட்டில் வந்துள்ளதா? டெல்லி சர்க்காரின் நடைமுறைப்படி ரெவிநியூ, போலீஸ், அரசு செயலகங்களில் வேலை பார்ப்போர் மற்றும் சில டாக்டர்கள் தான் அரசு ஊழியர்கள். இவர்கள் இருபத்திநான்கு மணி நேர ஊழியர்கள். இவர்களை தி என் பி எஸ் சி மூலம் பரீட்சை எழுதி தேர்வுசெய்வதால் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் இவ்வாறு தேர்வு செய்யப்படுவதில்லை. எனவே பரீட்சை காலத்தில் பந்த் நடத்தும் இவர்களை சஸ்பெண்ட் செய்து டெர்மினடீ செய்யலாம்.


theruvasagan
ஜன 31, 2024 08:59

2021ல் வாராய் நீ வாராய் என்று கோஷ்டி கானம் பாடி கொண்டுவந்து வச்சீங்களே. யாருக்காக. வாங்கற சம்பளம் லட்சத்துல. கிம்பளமோ அதைப்போல பல மடங்கு. ஆனாலும் பத்தலை பத்தலைனனு ஒப்பாரி. பத்தலை பத்தலைன்னு பாட்டு பாட வெட்டியா திரியற ஒருத்தன் இருக்கானே அவனை கூட்டு சேர்ததுக்கிட்டு ரோடு ரோடா பஜனை பண்ணுங்க தர்மதுரைகளா. பண்ணின பாவம் சும்மா போகுமா.


வெகுளி
ஜன 31, 2024 08:53

சபாஷ்... சுயநல கும்பலுக்கு சரியான பாடம் புகட்டினார்...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை