உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லிக்கட்டு ஏறுதழுவல் அரங்கு இன்று திறப்பு

ஜல்லிக்கட்டு ஏறுதழுவல் அரங்கு இன்று திறப்பு

மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில், 64 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 'கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை' முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கிறார்.இதன்பின் அந்த அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்து பார்வையிடுகிறார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியையும் துவக்கி வைக்கிறார். போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.இதற்காக காலை 9:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து ஜல்லிக்கட்டு அரங்கிற்கு செல்கிறார். பின், 11:45 மணிக்கு சிறப்பு விமானம் வாயிலாக சென்னை செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ