உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகள்; வீரத்துடன் மோதிய இளம் காளையர்கள்

மதுரையில் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகள்; வீரத்துடன் மோதிய இளம் காளையர்கள்

பொங்கல் திருநாளில் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆயிரம் காளைகள், 600 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=imetl2it&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமைச்சர் மூர்த்தி மேற்பார்வையில் கலெக்டர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதில் பங்கேற்க 2400 காளைகள், 1318 மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனை, ஆதார் ஆவணங்களுடன் ஆன்லைனில் பதிவு செய்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம், ஆயிரம் காளைகள், 600 வீரர்களுக்கு அனுமதி அளித்தது. இன்று காலை 5:30 மணியளவில் மீண்டும் நடந்த கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்குப் பின்பு வீரர்கள் களத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை பலர் காளைகளுடன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மாடுபிடி வீரர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.திருப்பரங்குன்றம்- ரோட்டில் உள்ள குருநாதசுவாமி சமேத அங்காள ஈஸ்வரி கோயில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. அருகே வி.ஐ.பி.,க்கள் மேடை, காளைகள், வீரர்கள் காயமடையாத வகையில் ரோட்டில் 200 மீட்டருக்கு தேங்காய் நார்கள் விரிக்கப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறமும் இரும்பு வலைகளுடன், மூங்கில் தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளது. இன்று காலை 6 மணி அளவில் வாடிவாசல் பூஜை நடந்தது. இது வரை நடந்த மருத்துவ பரிசோதனையில் ஒரே ஒரு காளைக்கு மட்டும் களத்தில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் காளையின் உரிமையாளர்கள் காளையின் மூங்கணாங்கயிறை அவிழ்ப்பதற்காக கத்தியோ அல்லது அரிவாளோ எடுத்து வரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உறுதியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்எல்ஏ., ராஜன்செல்லப்பா, துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் சுவீதா , மாவட்ட போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கார் பரிசு

போட்டியில் வெல்லும் சிறந்த மாடு பிடி வீரருக்கும், சிறந்த காளை மாடுக்கும் தலா ஒரு கார் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம்

திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் வாகனங்கள் முத்துப்பட்டி பிரிவுவரை அனுமதிக்கப்படுகின்றன. அவனியாபுரம் ஊருக்குள் வாகனங்களுக்கு தடைவிதித்து, பைபாஸ் ரோட்டில் இயக்கப்படுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜல்லிக்கப்டில் ஏற்படக் கூடிய அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2500க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அவசர சிகிச்சைக்காக மருத்துவர்களும் செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.நாளை (ஜன.,16) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜன.,17) அலங்காநல்லுாரிலும் அவ்வூர் விழா கமிட்டி சார்பிலும் ஜல்லிக்கட்டு நடக்க இருக்கிறது. அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ரூ.45 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில் போட்டிகள் எப்போது முதல் நடைபெறும் என்பது குறித்து ஜன.,23 ல் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ManiK
ஜன 15, 2024 15:56

Forcing participants to wear மஞ்ச சட்டை with sticker of irrelevant people who were the reason for Jallikattu ban 11yrs back.


msk
ஜன 16, 2024 05:46

100 true cheap publicity


mrsethuraman
ஜன 15, 2024 14:07

எல்லா டிவியிலும் மூன்று நாட்களுக்கு வெறும் காளை மாட்டையே தொடர்ந்து காண்பிப்பார்கள்


ஆரூர் ரங்
ஜன 15, 2024 12:20

திமுக மற்றும் கூட்டணித் தலைவர்கள் தாங்களே மாடு பிடித்து ஜல்லிக்கட்டை சிறப்பிக்க வேண்டும்????. அதுதான் தமிழர் அடையாளம்.


Seshan Thirumaliruncholai
ஜன 15, 2024 10:13

ஜல்லிக்கட்டு ஹிந்து மக்களின் நம்பிக்க அல்லது சமுதாயத்தின் வீரவிளையாட்டு . அமைச்சர்கள் விளையாட்டை தொடக்கிவைப்பது நம்பிக்கை மற்றும் வீரவிளையாட்டு. இது அரசியல் நிகழ்ச்சியல்ல. தமிழ் சமுதாயத்தின் நிகழ்வு. மன்னர் காலத்தில் மன்னர் அரிசியுடன் மாடத்தில் இருந்து ரசித்து பரிசுகள் வழங்குவார். மன்னர் இடத்தில் அமைச்சர்களின் தலைமை வகிப்பவர் இருப்பது சால சிறந்தது.


vbs manian
ஜன 15, 2024 10:09

இந்த ஜல்லிக்கட்டு இந்த நவீன யுகத்தில் வேண்டுமா. வருடம் தோறும் ஐந்தாறு இளைஞர்கள் மரணம். பத்து பதினைந்து பேர் வாழ்நாள் முழுதும் ஊனம் அடைந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள்.பொங்கலை மகிஷ்ச்சியாய் கொண்டாட வேறு வழி இல்லையா.


சுந்தரம்
ஜன 15, 2024 18:40

எனது கருத்தும் இதுதான்...


Jai
ஜன 15, 2024 09:32

ஜல்லிக்கட்டில் பங்கேற்க்கும் இளவட்டங்களுக்கு வாழ்த்துக்கள். சதி திட்டங்களை உடைத்து நாம் ஒன்றினைந்து போராடி பெற்ற நமது உரிமை இந்த ஜல்லிக்கட்டு. இதில் கொடுப்பட்டுள்ள வரைமுறைக்குள் நாம் நடந்து நமதுரிமை காப்பாற்றி கொள்வோம். கொசுறு, ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்தவர்கள் கொங்கிரசு மற்றும் திம்கா. இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் தடைக்கு முனைவார்கள்.


அப்புசாமி
ஜன 15, 2024 08:53

மாடுகளுக்கு எல்லாவித புண்ணாக்கு டிரெய்னிங்கும் குடுப்பாங்க. ஆனா, ஒரு மாட்டுக்கு 50 ஆளுங்க நின்னா எப்புடி சமாளிக்கறதுன்னு டிரெய்னிங் குடுக்க மாட்டாங்க.


KayD
ஜன 15, 2024 09:51

Correct aa soneenga பிடிக்க வரும் வீராதி வீர sopplangigal நிறைய பேர் kanja.. Saraku la தான் இருப்பாங்க.. Jallikattu போராட்டம் பிறகு இவனுக ஆடும் ஆட்டம் அதிகம்.. உண்மை யா செய்யும் கொஞ்ச nanja ஆட்கள் இருந்தும் நிறைய குழப்பங்கள் தான் அதிகம். ஒரு குறிப்பிட்ட ஜாதி aatam அதிகம்


வெகுளி
ஜன 15, 2024 08:44

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டை மீட்டுத்தந்த மோடிஜி அவர்களுக்கு தமிழர்கள் சார்பில் நன்றிகள்...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ