உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.19ல் மோடி ராமேஸ்வரம் வருகை

ஜன.19ல் மோடி ராமேஸ்வரம் வருகை

ராமநாதபுரம்: பிரதமர் மோடி ஜன.,19ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்தரிசனம் செய்கிறார். இன்று (ஜன., 15) பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை ( ஜன.,16ல்) கவர்னர் ரவி கோயிலில் உழவாரப்பணியில் பங்கேற்கிறார்.அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகம் ஜன.,22ல் நடக்கிறது. இதற்காக பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டுள்ளார். அவர் புனிதப்பயணமாக ஜன.,19ல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இங்கிருந்து புனித தீர்த்தம் எடுத்துச் செல்கிறார். முன்னதாக நாளை கவர்னர் ரவி ராமேஸ்வரம் வருகிறார். காலை 11:00 மணிக்கு கோயிலில் தரிசனம் செய்து துாய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

raju
ஜன 15, 2024 16:53

அரசியல் va


mothibapu
ஜன 15, 2024 14:37

பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஒரே தேசம் ஒரே மதம்(மனிதநேயம்) என்ற கோட்பாடு இருந்தால் இன்னும் பாரதம் வளரும்.


அப்புசாமி
ஜன 15, 2024 11:23

வாங்கோ.. மதுரைல நீங்க வெச்ச நாலு செங்கல்லில் முய்ணு அப்பிடியே இருக்கு. பாத்துட்டு போங்க.


அப்புசாமி
ஜன 15, 2024 11:21

மதுரைக்குப்.போறாரா? ஏன் எய்ம்ஸ் வேலை 95 சதவீதம் முடிஞ்சு போச்சுன்னு திறப்பு விளாவா?


ராமகிருஷ்ணன்
ஜன 15, 2024 06:56

இந்துகளுக்கு திமுக, காங்கிரஸ், மற்ற அல்லக்கை கட்சிகள் செய்து வரும் துரோகங்களுக்கு விடிவே இல்லையே என்று தெய்வத்திடம் புலம்பும் மக்களுக்கு தெய்வம் தந்துள்ள பிரதமர். பல நூற்றாண்டுகளுக்கு பிரதமரின் புகழ் நிலைத்து நிற்கும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை