வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எஸ்டேட் பங்குகளில் பாதி ஜெ பெயரில் இருந்தது. அவற்றை அவரது வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டீர்களா?
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவாக மண்டபம் அமைக்க, கோடநாடு எஸ்டேட்டில் பூஜை போடப்பட்டுள்ளது. மண்டபம் அமைக்க ஏற்கனவே முறைப்படி அரசுக்கு மனு அளித்தும், இதுவரை ஒப்புதல் தரவில்லை. கோடநாடு எஸ்டேட் மேலாளர், நீலகிரி கலெக்டரிடம் பல முறை அணுகியும், கலெக்டர் அனுமதி அளிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன், கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளனர். சொந்த இடத்தில் மண்டபம் கட்டலாம் என, சமீபத்தில் கோர்ட் அறிவித்துள்ளது. இருப்பினும், தி.மு.க, அரசு சொந்த இடத்தில் முன்னாள் முதல்வருக்கு மண்டபம் கட்ட அனுமதி அளிக்கவில்லை. 2026ல், தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் அனுமதி பெற்று மண்டபம் கட்டப்படும்.தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே என் முதல் வேலை. - சசிகலாஜெயலலிதா தோழி
எஸ்டேட் பங்குகளில் பாதி ஜெ பெயரில் இருந்தது. அவற்றை அவரது வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டீர்களா?