மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
விழுப்புரம்:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், புகார் அளிக்க சென்ற பெண் அதிகாரியின் காரை மறித்த முன்னாள் எஸ்.பி., கண்ணனுக்கு, 500 ரூபாய் அபராதமும் விதித்து, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.அதை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கை வேறு கோர்ட்டிற்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தரப்பில் தாக்கல் செய்த மனு ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடியானது.அதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 29ம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டிற்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதால், அவகாசம் வழங்க கோரினார். அதற்கு, அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தனர்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா, தொடர்ந்து அவகாசம் கேட்பது சரியல்ல, இனி அவகாசம் தர முடியாது, கடைசி வாய்ப்பாக 31ம் தேதி, அவரது தரப்பு வாதங்களை வைக்க உத்தரவிட்டார்.அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் ஆதிசங்கரன், 'இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்றக்கோரி, மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான உத்தரவு வரும் வரை எங்கள் வாதத்தை முன்வைக்க பிப்.,4ம் தேதி வரை அவகாசம் வேண்டும்' என்றார்.அதற்கு, அரசு வக்கீல் கலா ஆட்சேபனை தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பூர்ணிமா, 'பலமுறை அவகாசம் வழங்கியும் வாதத்தை முன்வைக்கவில்லை. மேலும் அவகாசம் வழங்க முடியாது. நாளை பிப்., 1ம் தேதி உங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க கடைசி வாய்ப்பு. தவறினால், நீதிமன்றமே மூத்த வக்கீல் ஒருவரை நியமித்து, வாதிட வைத்து, தீர்ப்பு வழங்க நேரிடும்' என எச்சரித்தார்.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago