உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நீதிபதி சுவாமிநாதன் குடும்பத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டும்

 நீதிபதி சுவாமிநாதன் குடும்பத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டும்

திருப்பத்துார்: ''நீதிபதி சுவாமிநாதனுக்கு, சோஷியல் மீடியா மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில், அவரை பொதுவெளியில் தி.மு.க.,வினர், அவதுாறு பரப்பி வருவதால், அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என, பா.ஜ., கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலர் நடிகை கஸ்துாரி கூறினார். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் அவர் நேற்று அளித்த பேட்டி: தேவையில்லாமல் ஹிந்து, முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்துவது தி.மு.க., தான். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், அங்குள்ள ஹிந்து, முஸ்லிம் மக்கள், இத்தனை ஆண்டு காலமாக கண்டுகொள்ளாத நிலையில், அரசியலுக்காக, தி.மு.க., அரசு சர்ச்சையை ஏற்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மூன்று முறை நீதிமன்ற தீர்ப்பை தி.மு.க., அரசு மீறி உள்ளது. நேர்மையாக எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நீதியரசரை, தனிப்பட்ட முறையில் தாக்கும், தி.மு.க., அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தொடர்ந்து அவர் மீது அவதுாறு பரப்பி வருவதன் மர்மம் என்ன? நீதியரசர் சுவாமிநாதனுக்கு எதிராக மதுரையில் தேசவிரோத சக்திகள் சோஷியல் மீடியா மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில், அவரை பொதுவெளியில் அவதுாறு பரப்பி வருவதால், அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி