உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பில்கிஸ் பானு வழக்கில், 11 பேரை முன்னதாக விடுதலை செய்ததை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.., அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.., ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று பில்கிஸ் பானு கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன. நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் பாதுகாப்பில் அரசு உறுதி

சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தற்போது 5 ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும். அரசின் நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்படும். கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும். அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதி உதவி வழங்குவதற்கு திருத்தி அமைக்கப்பட்ட வழிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் காலை சிற்றுண்டி, புதுமைப்பெண் திட்டம் அமல்படுத்துவது குறித்து நல்ல அறிவிப்பு வரும். சிறுபான்மையினர் பாதுகாப்பில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

S Ramkumar
ஜன 15, 2024 11:58

ராசா ஸ்டாலின் அவர்களே அப்படியே பொன்முடி தீர்ப்புக்கும் தலை வணங்குகிறோம் என்று கூறி சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டியது தானே.


Dharmavaan
ஜன 09, 2024 19:24

சுரணை கெட்ட ஹிந்துக்கள் இன்னும் இந்த அரசை ஆதரித்தால் ஹிந்து மதம் அழிந்துவிடும்


கனோஜ் ஆங்ரே
ஜன 09, 2024 19:36

சொரிங்க சார்...?


கனோஜ் ஆங்ரே
ஜன 09, 2024 19:37

உச்ச நீதிமன்றம் உங்க கட்சிய கழுவி, கழுவி ஊத்தியிருக்கு... அதைப் பத்தி ஏதும் சொல்லலையே ...?


Dharmavaan
ஜன 09, 2024 19:22

மோடி துணிந்து கொலீஜியத்தை நீக்க வேண்டும்.பாராளுமன்ற சட்டத்தின் மூலம்.


கனோஜ் ஆங்ரே
ஜன 09, 2024 19:36

தர்மராசா.... மொதல்ல அவர் ஆட்சியில் இருக்கிறாரா பார்ப்போம்... அப்புறம் நீக்கலாம் தர்மவானே....?


sankar
ஜன 10, 2024 10:26

- அவரை விட்டால் வேறு யாருமே இல்லை தம்பி


Dharmavaan
ஜன 09, 2024 19:17

ராஜிவ் கொலையாளிகளை விடுவித்ததது என்ன நீதி அப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கே நீதி .


GMM
ஜன 09, 2024 15:09

முன் கூட்டியே விடுதலை மனு. 2022ல் SC அமர்வு, குஜராத் பரிசீலிக்க உத்தரவு. 2019, 2020 ல் குஜராத் நீதிமன்றத்தில் ஷா அணுகிய போது, மகாராஷ்டிரா முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு. மகாராஷ்டிரா செல்லாமல், குஜராத் நீதிமன்ற மனு தள்ளுபடி விவரம் தெரிவிக்காமல் உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று விட்டார். வழக்கு விவரங்கள் நீதிமன்றம், வழக்கறிஞர்கள், மனுதாரர்களிடம் வரிசையாக இல்லை? குஜராத் அரசு எதனையும் மறைத்த விவரம் இல்லை.


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜன 09, 2024 14:38

நீதியை நிலை நாட்டுறதை பற்றி நீங்க பேசுறதுதான் அமோகம் அப்படி நீங்க இதுவரை நீதியை நிலைநாட்டியதை நினைத்தால் நேக்கு சிப்பு சிப்பா வருது


Murthy
ஜன 09, 2024 13:56

பாத்திமாவுக்கு கிடைத்ததா??


ganesha
ஜன 09, 2024 13:52

அப்போ பொன்முடி தீர்ப்பு ????????????


Sivagiri
ஜன 09, 2024 13:49

கரைக்டு - நீங்களும் சிறையில் உள்ள பயங்கரவாதிகள் - தீவிரவாதிகளை விடுவிக்க முடியாதே - சுப்ரீம் கோர்ட் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுவிக்க முடியாதுங்கிறது தெளிவாயாருச்சு


Varadarajan Nagarajan
ஜன 09, 2024 13:40

நீதி என்பது எந்த ஒரு கட்சி சார்ந்ததாகவோ அல்லது சமூகம் சார்ந்ததாகவோ இருக்க கூடாதுஎன்பதில் சந்தேகம் இல்லை. தர்மபுரி பஸ் எரிப்பு, கோவை குண்டு (சிலிண்டர்) வெடிப்பு, ராஜிவ் காந்தி படுகொலை குற்றவாளிகள், வேங்கை வயல் சம்பவம், கோவை மாணவிகள் பாலியல் வன்கொடுமை போன்றவற்றிற்கும் இது பொருந்தும். அதுபோல் சிறை தண்டனை பெரும் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதைப்பற்றியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியுள்ளது. அண்ணா பிறந்தநாள், கலைஞர் பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் போன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி விடுதலை செய்வதற்கும் இந்த தீர்ப்பு பொருந்தும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை