உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை மிரட்டி சீட் பெற மாநாடு நடத்தவில்லை: திருமா

தி.மு.க.,வை மிரட்டி சீட் பெற மாநாடு நடத்தவில்லை: திருமா

விழுப்புரம்: ''பா.ம.க., மற்றும் பா.ஜ., உடன் எப்போதும் அணி சேர முடியாது,'' என வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.புதுச்சேரி மண்டல வி.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.கூட்டத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: வி.சி., சார்பில், மது ஒழிப்பு மாநாடு, உளுந்துார்பேட்டையில் நடத்த உள்ளோம். தி.மு.க.,வை மிரட்டி, கூடுதல் சீட் கேட்டு பேரம் பேசுவதற்காக இந்த மாநாடு நடப்பதாக சிலர் கூறுகின்றனர். அதனால்தான், அ.தி.மு.க.,வை அழைத்ததாகவும் பேசி, அரசியல் முடிச்சு போடுகின்றனர்.மது ஒழிப்பு குறித்து, 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். 2016ல், மக்கள் நல கூட்டணி மூலம் மதுவிலக்கு பிரசாரம் செய்தேன். கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் 69 பேர் இறந்தது தான், இந்த மாநாடு நடத்துவதற்கான தொடக்கப்புள்ளி. இது தேர்தலுக்காக நடத்தப்படுவது அல்ல. தேர்தல் கணக்கு போட்டு எதையும் செய்ய மாட்டேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, 'சீட்' குறித்து சிந்திப்பேன்.மதுவிலக்கு கொள்கையுள்ள காந்தி பிறந்த நாளில் மாநாடு நடக்கிறது. காங்., செய்ய வேண்டிய வேலையை வி.சி., செய்கிறது. மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்க வேண்டும். மது ஒழிப்பு, பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது ஒரு கட்சியின் மாநாடு அல்ல. அனைவருக்குமான பொது கோரிக்கை. மதுவை ஒழிப்போம் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க, இடசாரிகள் என உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டும். பா.ம.க., மற்றும் பா.ஜ., உடன் எப்போதும் அணி சேர முடியாது. தி.மு.க.,வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக, தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டும். அதற்காக, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர். அதற்கு காரணம் மது. தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், முதல்வரிடமே மனு கொடுக்கலாமே என்கின்றனர். இது மக்களே ஒன்று சேர்ந்து, கேட்க வேண்டிய கோரிக்கை. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ems
செப் 13, 2024 22:30

இவங்க அதிமுக வை மாநாடு நடத்த அழைப்பாங்க... அவங்க வரமாட்டாங்க... அப்போ 2026 தேர்தல் வரும்போது... இதை காரணம் காட்டி அதிமுக வை கேவலமா பேசி மக்கள் ஓட்டை வாங்க முடியும்... அப்படினு ஏதோ ஒரு ஆள் ஐடியா சொல்லி இருக்கணும்... அது தான் இந்த அந்தர் பல்டிக்கு காரணம்...


ஆரூர் ரங்
செப் 13, 2024 18:46

கெஜ்ரிவாலை அழைக்கலாமே. INDI தோழராச்சே. அவர்தான் மது வழக்கில் வெளியே வந்துவிட்டாரே.


theruvasagan
செப் 13, 2024 15:50

இப்போதைக்கு தேர்தல் இல்லை. அதனால் தேர்தலை கணக்கு வைத்து எதையும் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆனால் 2026ல் தேர்தல் வருமா இல்லையா. அப்ப பாருங்க சீட்டுக்கும் கூட்ணிக்கும் நான் அடிக்கப் போகிற அந்தர் பல்டிகளை. தயவு செஞ்சு இப்ப நான் அடிக்கிற கூத்துகளை அன்னைக்கு ஞாபகப்படுத்திடாதீங்க. அப்புறம் என் கணக்கு பிணக்காயிடும். பெரிய தலை ஊர்ல இல்லையே. சும்மா ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாமே என்றுதான் இதல்லாம். பட்டிய காமிச்சா பெட்டிப் பாம்பா அடங்கிடுவேன். வேங்கைவயல் விஷயத்தில் நீங்களே பார்த்திருப்பீங்களே. வாயைத் திறக்கிறேனா. மனுசனுக்கு தன்மானம் முக்கியமா சன்மானம் முக்கியமா. நீங்களே சொல்லுங்க.


Rengaraj
செப் 13, 2024 10:56

மது ஒழிப்புக்கு ஒரு கொள்கை வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசை கேள்விக்கேட்ட்டார் . அங்கு கூட்டணியில் இருக்கிறீர்களே அவர்களை முதலில் கேட்டீர்களா என்று நிர்மலா அவர்கள் சரியான பதில் கொடுத்துவிட்டார். மாநில சுயாட்சி என்று வாய்கிழிய கத்துகிறார்களே , இந்த விஷயத்தில் அவர்கள் சுயாட்சி என்ன ஆயிற்று ? கூட்டணியில் இருக்கும்போது இதே திருமா தேர்தல் சமயத்தில் இதை ஏன் கேட்டிருக்கக்கூடாது ? அப்போது ஏன் இதேமாதிரி நடத்தியிருக்கக்கூடாது? இப்போது மதுவிலக்கு விஷயத்தில் ஆளும்கட்சியின் அணுகுமுறை பிடிக்கவில்லை என்றால் தனது கட்சியின் எம்.எல்.ஏ , எம்.பிக்களை கூப்பிவிட்டு பதவியை ராஜினாமா பண்ண சொல்லிவிட்டு கூட்டணியை விட்டு வெளியேறலாம் அல்லவா ? தேர்தல் சமயத்தில் அந்த பதவி வேண்டும் என்பதற்காக தி.மு.கவுக்கு ஜால்றா அடித்துவிட்டு தற்போது தனது போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் அழைக்கின்றார் அருமையான நாடகம் இவர்பின்னால் இருக்கும் தொண்டர்கள் தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிட்டு இன்னமும் இவரை நம்புகிறார்களே ?


r ravichandran
செப் 13, 2024 10:47

இது பொது பிரச்சினை தான் என்று திருமாவளவன் சொல்கிறார், அதில் பிஜேபி, பாமகவிற்கு அழைப்பு இல்லை என்பது நகைமுரன். அரசியல் இல்லை, கூட்டணி கணக்குகள், சீட் பேரம் இல்லை என்பது காமெடி.


lana
செப் 13, 2024 10:22

சீட் நோ ட்டு கேட்கிறது தான் எங்கள் வேலை. மீதமுள்ள நல்ல விஷயம் எல்லாம் மக்கள் மட்டுமே கேட்க வேண்டும்


sankar
செப் 13, 2024 09:32

வெளியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்ட நிலை திமுகவுக்கு - தேவை இல்லாத ஆணி என்பது இப்போது புரிந்து இருக்கும் - இந்த ஜாதி கட்சி கோஷ்டியை கழற்றி விடுங்கள் முதல்வர் சார்


Sankare Eswar
செப் 13, 2024 09:32

தோழமை சுட்டி .... தெருமா தேறுமா?


Rajarajan
செப் 13, 2024 09:25

எதுக்கு பாஸ் இவ்ளோ சிரமப்பட்டு, மாநாடு எல்லாம் போட்டுக்கிட்டு. பேசாம, ஒரு ஆட்டோ பிடிச்சி நீங்க மட்டும் முதல்வர் வீட்டுக்கு போயிட்டு, நேரடியா இதை சொல்லிட்டு வரலாமே. அப்படியே முதல்வர் குடும்ப உறுப்பினர் மற்றும் தங்கையிடமும் சொல்லிட்டா, முடிஞ்சது வேலை. அதைவிட்டு, ஏன் இவ்ளோ அலப்பறை ?? உங்க சாயம் வெளுத்துப்போச்சு.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 13, 2024 09:14

ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்துகிட்டு கோரிக்கை வைத்து மாநாடு அடைத்துவதெல்லாம் ரெம்ப ஓவர். மக்களை ஏமாற்றும் வேலை திருமாவிற்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை